உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 செப்டம்பர் பக். 7
  • பணப் பிரச்சினை வந்தாலும் நம்பிக்கையோடு இருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பணப் பிரச்சினை வந்தாலும் நம்பிக்கையோடு இருங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • யெகோவா “உயிருள்ள கடவுள்” என்பதை மறந்துவிடாதீர்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முன்பே தயாராக இருக்கிறீர்களா?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 செப்டம்பர் பக். 7
“சகித்திருக்கும் ஒரு வீட்டைக் கட்டுங்கள்—‘உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்’” என்ற வீடியோவிலிருந்து சில காட்சிகள். படத்தொகுப்பு: 1. ஆங்கேல் பைபிளைப் படித்துக்கொண்டிருக்கிறார். 2. லெஸ்டரும் அவருடைய மனைவியும் ஒன்றுசேர்ந்து பைபிளைப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பணப் பிரச்சினை வந்தாலும் நம்பிக்கையோடு இருங்கள்

இந்தக் கடைசி நாட்களில் வாழ்க்கையை ஓட்டுவதே ரொம்பக் கஷ்டம்தான். இந்த உலகத்துக்கு முடிவு நெருங்க நெருங்க நம் கஷ்டங்கள் இன்னும் அதிகமாகத்தான் ஆகும். சிலசமயங்களில் அடிப்படை விஷயங்கள்கூட இல்லாமல் நாம் கஷ்டப்படலாம். (ஆப 3:16-18) அந்த மாதிரி சமயங்களில் நம்பிக்கை இழக்காமல் இருக்க எது நமக்கு உதவி செய்யும்? எப்போதும் யெகோவாவையே நம்பியிருங்கள். தன்னுடைய மக்களைப் பார்த்துக்கொள்வதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நமக்குத் தேவையானதை அவரால் கொடுக்க முடியும்.—சங் 37:18, 19; எபி 13:5, 6.

நீங்கள் என்ன செய்யலாம்:

  • ஆலோசனைக்காகவும் ஞானத்துக்காகவும் உதவிக்காகவும் யெகோவாவிடம் கெஞ்சிக் கேளுங்கள்.—சங் 62:8

  • உங்களுக்குப் பழக்கமில்லாத வேலைகளைச் செய்வதற்குக்கூட தயாராக இருங்கள்.—g 4/10 30-31, பெட்டிகள்

  • தினமும் பைபிளைப் படிப்பது, கூட்டங்களில் கலந்துகொள்வது, ஊழியத்துக்குப் போவது போன்ற விஷயங்களைத் தவறாமல் செய்யுங்கள்

சகித்திருக்கும் ஒரு வீட்டைக் கட்டுங்கள்—“உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்” என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • சில குடும்பங்களுக்கு என்ன பிரச்சினை இருந்தது?

  • வாழ்க்கையில் எது ரொம்ப முக்கியம்?

  • பணப் பிரச்சினையில் கஷ்டப்படுகிறவர்களுக்கு நாம் எப்படி உதவி செய்யலாம்?

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்