செப்டம்பர் 1-7
நீதிமொழிகள் 29
பாட்டு 28; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. கடவுளுக்குப் பிடிக்காத நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் ஒதுக்கித்தள்ளுங்கள்
(10 நிமி.)
யெகோவாவுக்குக் கீழ்ப்படியுங்கள், அப்போது உங்களுக்கு உண்மையான சந்தோஷம் கிடைக்கும் (நீதி 29:18; w18.02 பக். 30 பாரா 2)
ஒரு பழக்கவழக்கம் யெகோவாவுக்குப் பிடிக்குமா இல்லையா என்பதைப் புரிந்துகொள்ள அவரிடம் ஞானத்தைக் கேட்டு ஜெபம் செய்யுங்கள் (நீதி 29:3அ; w19.04 பக். 17 பாரா 13)
மற்றவர்கள் வற்புறுத்துகிறார்கள் என்பதற்காக யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்துவிடாதீர்கள் (நீதி 29:25; w18.11 பக். 11 பாரா 12)
நன்றாக ஆராய்ச்சி செய்து படிப்பதும், நம் நம்பிக்கைகளை நல்ல விதத்தில் விளக்கக் கற்றுக்கொள்வதும் மற்றவர்களுடைய வற்புறுத்தலைச் சமாளிக்க உதவும்
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
நீதி 29:5—நாம் ஏன் மற்றவர்களைப் போலியாகப் புகழாமல் மனப்பூர்வமாகப் பாராட்ட வேண்டும்? (w17.10 பக். 9 பாரா 11)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) நீதி 29:1-18 (th படிப்பு 5)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. நீங்கள் சந்திக்கும் நபரை விசேஷப் பேச்சுக்குக் கூப்பிடுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 3)
5. பேச ஆரம்பிப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். காவற்கோபுரம் எண் 1 2025-ஐப் பயன்படுத்திப் பேச ஆரம்பியுங்கள். கேட்பவர் வேறு விஷயத்தில் ஆர்வம் காட்டினால், அதற்கேற்ற மாதிரி பேசுங்கள். (lmd பாடம் 3 குறிப்பு 3)
6. பேச ஆரம்பிப்பது
(5 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. போர்களைப் பற்றிக் கவலைப்படும் ஒருவருக்கு காவற்கோபுரம் எண் 1 2025-ஐக் கொடுங்கள். (lmd பாடம் 3 குறிப்பு 4)
பாட்டு 159
7. சபைத் தேவைகள்
(15 நிமி.)
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பகுதி 4—முன்னுரை, பாடங்கள் 14-15