உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb25 செப்டம்பர் பக். 14-15
  • அக்டோபர் 20-26

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அக்டோபர் 20-26
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
mwb25 செப்டம்பர் பக். 14-15

அக்டோபர் 20-26

பிரசங்கி 9-10

பாட்டு 30; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. பிரச்சினைகளைச் சரியான கண்ணோட்டத்தில் பாருங்கள்

(10 நிமி.)

பிரச்சினைகள் வருகிறது என்பதற்காக யெகோவாவுக்கு நம்மைப் பிடிக்கவில்லை என்று நாம் நினைக்கக் கூடாது (பிர 9:11; w13 8/15 பக். 14 பாரா. 20-21)

சாத்தானுடைய உலகத்தில் நீதி நியாயத்தோடு நடத்தப்படுவோம் என்று எதிர்பார்க்க முடியாது (பிர 10:7; w19.09 பக். 4 பாரா 10)

கஷ்டங்கள் வரும்போதுகூட, யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற நல்ல நல்ல விஷயங்களை அனுபவிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும் (பிர 9:7, 10; w11 10/15 பக். 8 பாரா. 1-2)

பாலத்தில் நின்றுகொண்டிருக்கும் ஒரு பெண் வானத்தை அண்ணாந்து பார்க்கிறார்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • பிர 10:12-14—வீண்பேச்சைப் பற்றி இந்த வசனங்கள் என்ன எச்சரிப்பைக் கொடுக்கின்றன? (lv பக். 156-157 பாரா. 11-12)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) பிர 10:1-20 (th படிப்பு 11)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) பொது ஊழியம். சோகமாகத் தெரியும் ஒருவரிடம் பேச ஆரம்பியுங்கள். (lmd பாடம் 3 குறிப்பு 4)

5. பேச ஆரம்பிப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. பொருளாதாரப் பிரச்சினையைப் பற்றிக் கவலைப்படுவதாகச் சொல்கிறவரிடம், அன்பு காட்டுங்கள் சிற்றேட்டின் இணைப்பு A-ல் இருக்கும் “நாம் சொல்லித்தர விரும்பும் உண்மைகள்” பகுதியிலிருந்து ஏதாவது ஒரு உண்மையைப் பற்றிப் பேசுங்கள். (lmd பாடம் 4 குறிப்பு 4)

6. சீஷர்களை உருவாக்குவது

(5 நிமி.) lff பாடம் 17 சுருக்கம், ஞாபகம் வருகிறதா?, மற்றும் குறிக்கோள். (lmd பாடம் 12 குறிப்பு 3)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 47

7. எப்படிப்பட்ட சோதனை வந்தாலும் யெகோவா உங்களைத் தாங்கிப் பிடிப்பார்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

தினமும் நமக்குப் பிரச்சினைகளும் கஷ்டங்களும் வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால், சில பிரச்சினைகள் திடீரென்று வந்துவிடலாம். அதனால் நாம் உடைந்துபோய்விடலாம், என்ன செய்வது என்றே தெரியாமல் திண்டாடலாம், இதையெல்லாம் சமாளிக்க முடியாது என்று நினைத்து கவலையில்கூட மூழ்கிவிடலாம். அந்த மாதிரி சமயத்தில் யார் நமக்கு உதவி செய்வார்? நாம் என்ன செய்ய வேண்டும்?

நமக்கு என்ன மாதிரி பிரச்சினைகள் வந்தாலும் சரி, யெகோவா எப்போதும் நம் “காலங்களை [அதாவது, வாழ்க்கையை] நிலைப்படுத்துகிறார்.” (ஏசா 33:6) நாம் அடக்கமாகவும் நியாயமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார், அப்படி நடந்துகொண்டால் அவர் நமக்கு உதவி செய்வார். (நீதி 11:2) பயங்கரமான பிரச்சினை வரும்போது, நல்ல முடிவுகளை எடுப்பதற்கு... நம்மையும் நம்முடைய அன்பானவர்களையும் கவனித்துக்கொள்வதற்கு... துக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கு... நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.—பிர 4:6.

நமக்கு உதவி செய்ய சகோதர சகோதரிகளை யெகோவா பயன்படுத்துகிறார். அதனால், அவர்களிடம் உதவி கேட்க அல்லது அவர்களுடைய உதவியை ஏற்றுக்கொள்ள நாம் தயங்கக் கூடாது. சகோதர சகோதரிகள் உங்கள்மேல் ரொம்ப அன்பு வைத்திருக்கிறார்கள், உங்களுக்கு உதவ ஆசையாக இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

2 கொரிந்தியர் 4:7-9-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • கஷ்டமாக இருந்தாலும், கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும், பைபிளைப் படிப்பதற்கும், ஊழியம் செய்வதற்கும் தொடர்ந்து முயற்சி செய்வது ஏன் முக்கியம்?

“உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார்” என்ற வீடிHS-.25யோவில் வரும் ஒரு காட்சி: சகோதரர் மற்றும் சகோதரி செப்டர் தங்கள் பிள்ளையை இழந்த சோகத்தில் இருக்கிறார்கள்.

“உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார்” என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • யெகோவா எப்படி செப்டர் தம்பதிக்கு உதவி செய்தார்?

  • சகோதர சகோதரிகள் எப்படி அவர்களுக்கு உதவி செய்தார்கள்?

  • அவர்களுடைய உதாரணத்திலிருந்து வேறென்ன பாடங்களை நீங்கள் கற்றுக்கொண்டீர்கள்?

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடம் 28, பகுதி 6—முன்னுரை, பாடம் 29

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 28; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்