உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb25 செப்டம்பர் பக். 12-13
  • அக்டோபர் 13-19

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அக்டோபர் 13-19
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
mwb25 செப்டம்பர் பக். 12-13

அக்டோபர் 13-19

பிரசங்கி 7-8

பாட்டு 39; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. ‘துக்க வீட்டுக்குப் போங்கள்’

(10 நிமி.)

துக்கத்தில் இருக்கிறவர்களை ஆறுதல்படுத்துவதற்கு நேரம் ஒதுக்குங்கள் (பிர 7:2; w17.07 பக். 14 பாரா 12)

இறந்தவருடைய நல்ல குணங்களைப் பற்றிப் பேசுவதன் மூலம் துக்கத்தில் இருக்கிறவர்களை ஆறுதல்படுத்துங்கள் (பிர 7:1; w19.06 பக். 23 பாரா 15)

அவர்களோடு சேர்ந்து ஜெபம் செய்யுங்கள் (w17.07 பக். 16 பாரா 16)

மனைவியை இழந்த ஒரு சகோதரரை ஒரு தம்பதி போய் பார்க்கிறார்கள். அந்த தம்பதி, இறந்துபோன அந்த சகோதரியோடு சந்தோஷமாக இருந்த சில ஃபோட்டோக்களைக் காட்டுகிறார்கள்.

ஞாபகத்தில் வையுங்கள்: அன்பானவரைப் பறிகொடுத்தவர்களுக்கு சகோதர சகோதரிகளுடைய ஆதரவு ரொம்ப காலத்துக்குப் பிறகுகூடத் தேவைப்படலாம்.—w17.07 பக். 16 பாரா. 17-19.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • பிர 7:20-22—நம் மனதைக் காயப்படுத்தியவரிடம் அதைப் பற்றிப் பேச வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய இந்த வசனங்கள் நமக்கு எப்படி உதவும்? (w23.03 பக். 31 பாரா 18)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) பிர 8:1-13 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(2 நிமி.) பொது ஊழியம். நீங்கள் பேசும் ஒருவருக்கு எந்த விஷயத்தில் ஆர்வம் இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள், அவரை மறுபடியும் சந்தித்து அதைப் பற்றிப் பேச ஏற்பாடு செய்யுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 4)

5. பேச ஆரம்பிப்பது

(2 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. (lmd பாடம் 2 குறிப்பு 3)

6. மறுபடியும் சந்திப்பது

(2 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சந்தித்த ஒருவரை மறுபடியும் சந்தித்து jw.org வெப்சைட்டைக் காட்டுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 4)

7. நம்பிக்கைகளை விளக்குவது

(5 நிமி.) நடிப்பு. ijwfq கட்டுரை 50—பொருள்: யெகோவாவின் சாட்சிகளுடைய சவ அடக்க நிகழ்ச்சி எப்படி இருக்கும்? (th படிப்பு 17)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 151

8. உயிர்த்தெழுதலில் உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

“பலமான விசுவாசத்தைக் காட்டிய பெண்களைப் பின்பற்றுங்கள்!​—⁠மார்த்தாள்” என்ற வீடிHS-.25யோவில் வரும் ஒரு காட்சி: உயிரோடு வரும் லாசருவை மார்த்தாளும் மரியாளும் சந்தோஷமாக வரவேற்கிறார்கள்.

உயிர்த்தெழுதல் பற்றி யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதி நமக்குக் கிடைத்திருக்கும் அருமையான ஒரு பரிசு. அதிலிருந்து அவருடைய குணங்களைத் தெரிந்துகொள்கிறோம். அதாவது, அவருடைய வல்லமை, ஞானம், இரக்கம், முக்கியமாக நம் ஒவ்வொருவர்மேலும் அவர் வைத்திருக்கிற அன்பு போன்றவற்றைத் தெரிந்துகொள்கிறோம்.—யோவா 3:16.

உயிர்த்தெழுதலில் நமக்குப் பலமான விசுவாசம் இருக்கும்போது, நம்முடைய பிரச்சினைகளைப் பற்றியே கவலைப்பட்டுக்கொண்டு இருக்க மாட்டோம். (2கொ 4:16-18) அதோடு, துன்புறுத்தலோ வியாதியோ வரும்போது அல்லது அன்பானவர் இறந்துபோகும்போது இந்த நம்பிக்கை நமக்கு சமாதானத்தையும் ஆறுதலையும் கொடுக்கும். (1தெ 4:13) உயிர்த்தெழுதலில் விசுவாசம் இல்லையென்றால் நமக்கு உண்மையான சந்தோஷம் இருக்காது. (1கொ 15:19) அதனால், இந்த அருமையான நம்பிக்கையின்மேல் விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும் என்பதை உங்கள் குறிக்கோளாக வையுங்கள்.

யோவான் 11:21-24-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • மார்த்தாள் எப்படி உயிர்த்தெழுதலில் பலமான விசுவாசத்தைக் காட்டினாள்?

  • அவளுடைய விசுவாசத்துக்கு என்ன பலன் கிடைத்தது?—யோவா 11:38-44

பலமான விசுவாசத்தைக் காட்டிய பெண்களைப் பின்பற்றுங்கள்!—மார்த்தாள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • உயிர்த்தெழுதல் நம்பிக்கையை நீங்கள் ஏன் ரொம்ப உயர்வாக நினைக்கிறீர்கள்?

  • உயிர்த்தெழுதலில் உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்த நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்?

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடங்கள் 26-27

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 124; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்