உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb25 செப்டம்பர் பக். 10-11
  • அக்டோபர் 6-12

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அக்டோபர் 6-12
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
mwb25 செப்டம்பர் பக். 10-11

அக்டோபர் 6-12

பிரசங்கி 5-6

பாட்டு 42; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

நகர வாசலுக்குப் பக்கத்தில் இருக்கும் சில இஸ்ரவேலர்கள், ஒரு ஆலய குரு பேசுவதைக் கேட்கிறார்கள். அந்த குரு, கையில் ஒரு சுருளை வைத்திருக்கிறார்.

குருவானவர் திருச்சட்டத்தை விளக்குகிறார்; இஸ்ரவேலர்கள் சிலர் அதைக் கவனித்துக் கேட்கிறார்கள்

1. நம்முடைய மகத்தான கடவுளுக்குப் பயபக்தி காட்டுவது எப்படி?

(10 நிமி.)

கூட்டங்களில் பயபக்தியும் மரியாதையும் காட்டுவதற்கு நாம் கவனித்துக் கேட்க வேண்டும். அதோடு, நம் உடையும் தோற்றமும் கண்ணியமாக இருக்க வேண்டும் (பிர 5:1; w08 8/15 பக். 15-16 பாரா. 17-18)

மேடையிலிருந்து நாம் செய்யும் ஜெபங்கள், அர்த்தமுள்ளதாகவும் மரியாதையாகவும் சுருக்கமாகவும் இருக்க வேண்டும் (பிர 5:2; w09 11/15 பக். 11 பாரா 21)

யெகோவாவுக்கு நம் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாக நேர்ந்துகொண்டதை நாம் நிறைவேற்ற வேண்டும் (பிர 5:4-6; w17.04 பக். 6 பாரா 12)

வித்தியாசமான வயதில் இருக்கும் சகோதர சகோதரிகள் ராஜ்ய மன்றத்தில் உட்கார்ந்து கூட்டத்தைக் கவனிக்கிறார்கள்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • பிர 5:8—அநியாயமாக நடத்தப்படும்போது இந்த வசனம் நமக்கு எப்படி ஆறுதல் தரும்? (w20.09 பக். 31 பாரா. 3-5)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) பிர 5:1-17 (th படிப்பு 12)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(1 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். நீங்கள் சந்திக்கும் நபர் வாக்குவாதம் செய்கிறார். (lmd பாடம் 4 குறிப்பு 5)

5. பேச ஆரம்பிப்பது

(2 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. அன்பு காட்டுங்கள் சிற்றேட்டின் இணைப்பு A-ல் இருக்கும் “நாம் சொல்லித்தர விரும்பும் உண்மைகள்” பகுதியிலிருந்து ஏதாவது ஒரு உண்மையைப் பற்றிப் பேசுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 3)

6. மறுபடியும் சந்திப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்த்த ஒருவரை மறுபடியும் சந்தியுங்கள். கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கும் ஒரு வீடியோவை அறிமுகப்படுத்தி, அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள். (lmd பாடம் 7 குறிப்பு 3)

7. சீஷர்களை உருவாக்குவது

(5 நிமி.) lff பாடம் 17 அறிமுகம் மற்றும் குறிப்புகள் 1-3 (lmd பாடம் 11 குறிப்பு 3)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 160

8. “நாம் சொல்லித்தர விரும்பும் உண்மைகள்” என்ற பகுதியை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா?

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும் ஒரு தம்பதி, ஒரு இளம் நபருக்கு பைபிள் வசனத்தை வாசித்துக் காட்டுகிறார்கள்.

அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள் சிற்றேடு ஊழியத்தில் இன்னும் திறமையாகப் பேச நமக்கு உதவி செய்துவருகிறது. அதிலுள்ள இணைப்பு A, அதாவது “நாம் சொல்லித்தர விரும்பும் உண்மைகள்” என்ற பகுதி, பைபிளில் இருக்கிற சில எளிமையான உண்மைகளை அறிமுகப்படுத்த நமக்கு உதவி செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. (எபி 4:12) இந்தப் பகுதியில் இருக்கும் ஒன்பது தலைப்புகளை நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறீர்களா?

  • ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, பொருத்தமான சமயத்தில் ஒரு எளிமையான பைபிள் உண்மையை நாம் எப்படிச் சொல்ல ஆரம்பிக்கலாம்?—lmd இணைப்பு A

  • உங்கள் பகுதியில் இருக்கும் மக்கள் எந்தத் தலைப்புகளில் நிறைய ஆர்வம் காட்டுகிறார்கள்?

  • இணைப்பு A-ல் இருக்கும் வசனங்களை நன்றாகத் தெரிந்துவைத்திருக்க நீங்கள் என்ன செய்யலாம்?

குறிக்கோள்:

ஒவ்வொரு தலைப்பின் கீழ் இருக்கும் ஒரு வசனத்தையாவது ஞாபகம் வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் பகுதியில் இருக்கும் மக்கள் எந்தத் தலைப்புகளில் அதிக ஆர்வம் காட்டுவார்களோ அவற்றிலிருந்து ஆரம்பியுங்கள்.

இந்த வசனங்களை ஊழியத்தில் பயன்படுத்த பயன்படுத்த, அவை நம் மனதில் நன்றாகப் பதிந்துவிடும். ஆனால், இந்த வசனங்களை நாம் அடிக்கடி பயன்படுத்த வேண்டுமென்றால், நம் பகுதியில் இருக்கும் மக்களை முதலில் நாம் சந்திக்க வேண்டும்.

“ இரும்பை இரும்பு கூர்மையாக்கும்”—நிறைய பேரிடம் பேசுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • நம் பகுதியில் இருக்கும் நிறைய பேரிடம் பேசுவதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடங்கள் 24-25

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 34; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்