உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb25 செப்டம்பர் பக். 8-9
  • செப்டம்பர் 29–அக்டோபர் 5

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • செப்டம்பர் 29–அக்டோபர் 5
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
mwb25 செப்டம்பர் பக். 8-9

செப்டம்பர் 29–அக்டோபர் 5

பிரசங்கி 3-4

பாட்டு 93; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஒரு தம்பதி ஒன்றாகச் சேர்ந்து சந்தோஷமாக பைபிள் படிக்கிறார்கள்.

உங்கள் துணையோடும் யெகோவாவோடும் நேரம் செலவிடுங்கள்

1. உங்கள் திருமண பந்தத்தைப் பலப்படுத்துங்கள்

(10 நிமி.)

முக்கியமான விஷயங்களையும் உற்சாகப்படுத்துகிற விஷயங்களையும் பேச நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் (பிர 3:1; ijwhf கட்டுரை 10 பாரா. 2-8)

சில விஷயங்களை ஒன்றாகச் சேர்ந்து செய்யுங்கள் (பிர 4:9; w23.05 பக். 23-24 பாரா. 12-14)

யெகோவாவோடு இருக்கும் பந்தத்தைப் பலப்படுத்துங்கள் (பிர 4:12; w23.05 பக். 21 பாரா 3)


உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘தனியாக விடுமுறையைக் கழிப்பதற்காகவோ வேலை விஷயத்துக்காகவோ மற்ற காரணங்களுக்காகவோ என் துணையைவிட்டு ரொம்ப நாள் பிரிந்திருந்தால் என் திருமண பந்தம் எப்படிப் பாதிக்கப்படலாம்?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • பிர 3:7—தடையுத்தரவின்போது இந்த நியமத்தின்படி நாம் எப்படி நடக்கலாம்? (w19.07 பக். 11 பாரா 14)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) பிர 4:1-16 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். காவற்கோபுரம் எண் 1 2025-ஐப் பயன்படுத்திப் பேச ஆரம்பியுங்கள். கேட்பவர் வேறு விஷயத்தில் ஆர்வம் காட்டினால், அதற்கேற்ற மாதிரி பேசுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 5)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. சந்தர்ப்ப சாட்சியில் காவற்கோபுரம் எண் 1 2025-ஐ வாங்கிக்கொண்ட ஒருவரை மறுபடியும் சந்தித்து பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 4)

6. பேச்சு

(5 நிமி.) lmd இணைப்பு A குறிப்பு 12—பொருள்: கடவுள் நியாயமானவர், பாகுபாடு பார்க்காதவர். (th படிப்பு 19)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 131

7. திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும்போது யெகோவாவின் ஆலோசனைகள்படி நடங்கள்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு உதவுகிற எல்லா விஷயங்களையும் தம்பதிகளுக்கு யெகோவா கொடுத்திருக்கிறார். ஆனாலும், கல்யாணமானவர்களுக்கு அவ்வப்போது பிரச்சினைகள் வரும். (1கொ 7:28) பிரச்சினைகளைச் சரிசெய்யாமல் விட்டுவிட்டால் அவர்களுடைய சந்தோஷம் குறைந்துகொண்டே போகும், இனி ஒன்றாகச் சேர்ந்து வாழ முடியாது என்றுகூட தோன்றும். உங்களுக்கும் இந்த மாதிரி பிரச்சினைகள் இருந்தால் என்ன செய்யலாம்?

எது உண்மையான அன்பு? என்ற நாடகத்தில், பயங்கரமான பிரச்சினைகளைச் சந்தித்த ஒரு இளம் தம்பதியைக் காட்டியிருப்பார்கள். யெகோவா என்ன நினைக்கிறார் என்று யோசிக்காமல் ஒரு முடிவை எடுக்க நினைத்த மகளுக்கு அவளுடைய அப்பா என்ன ஆலோசனை கொடுத்தார் என்று ஞாபகம் இருக்கிறதா?

எது உண்மையான அன்பு?—சில காட்சிகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • கல்யாண வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும்போது யெகோவாவுடைய ஆலோசனைகள்படி நடப்பது ஏன் முக்கியம்?—ஏசா 48:17; மத் 19:6

உங்கள் திருமண வாழ்க்கையில் பயங்கரமான பிரச்சினைகள் இருந்தால், தொடர்ந்து யெகோவாவோடு நெருக்கமாக இருக்க முயற்சி எடுங்கள். அதாவது, ஜெபம் செய்யுங்கள், பைபிளைப் படியுங்கள், கூட்டங்களிலும் ஊழியத்திலும் கலந்துகொள்ளுங்கள். பைபிள் நியமங்களைப் பயன்படுத்தி உங்கள் பிரச்சினைகளைச் சரிசெய்ய கடினமாக முயற்சி செய்யுங்கள். உங்கள் சூழ்நிலையைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார், நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறார் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள நம் பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்யுங்கள். இப்படிச் செய்யும்போது, யெகோவாவுடைய ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைக் காட்டுகிறீர்கள்.—நீதி 10:22; ஏசா 41:10.

“போலியான சமாதானத்தை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்!​—⁠டேரல் மற்றும் டேபோரா ஃப்ரிசிங்கர்” வீடிHS-.25யோவில் வரும் ஒரு காட்சி. சகோதரி ஃப்ரிசிங்கர் தன் இளம் வயதில் ஒரு ஃபோட்டோவைப் பார்ப்பதுபோல் நடித்துக் காட்டப்பட்டிருக்கிறது.

போலியான சமாதானத்தை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்!—டேரல் மற்றும் டேபோரா ஃப்ரிசிங்கர் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • திருமண வாழ்க்கையில் வரும் பயங்கரமான பிரச்சினைகளை சமாளிப்பதைப் பற்றி சகோதரர் மற்றும் சகோதரி ஃப்ரிசிங்கரிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடம் 22, பகுதி 5—முன்னுரை, பாடம் 23

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 51; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்