செப்டம்பர் 22-28
பிரசங்கி 1-2
பாட்டு 103; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. அடுத்த தலைமுறைக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுங்கள்
(10 நிமி.)
[பிரசங்கி புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
அடுத்த தலைமுறைக்குப் பயிற்சி கொடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு தலைமுறைக்கும் இருக்கிறது (பிர 1:4; w17.01 பக். 27-28 பாரா. 3-4)
மற்றவர்களுக்குப் பயிற்சியும் பொறுப்பும் கொடுக்கும்போது, யெகோவாவின் சேவையில் கடினமாக உழைப்பதால் வரும் சந்தோஷத்தை அனுபவிக்க அவர்களுக்கு உதவுகிறோம் (பிர 2:24)
பொறுப்புகளைச் செய்ய உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதால் இளம் சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுக்காமல் இருந்துவிடாதீர்கள்
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
பிர 1:1, அடிக்குறிப்பு—சாலொமோன் எந்த விதத்தில் ‘ஒன்றுகூட்டுகிறவராக’ இருந்தார்? (si பக். 112 பாரா 3)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) பிர 1:1-18 (th படிப்பு 11)
4. பேச ஆரம்பிப்பது
(2 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. எந்த விஷயத்தில் அந்த நபருக்கு ஆர்வம் இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள். அவரை மறுபடியும் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள். (lmd பாடம் 3 குறிப்பு 5)
5. பேச ஆரம்பிப்பது
(2 நிமி.) பொது ஊழியம். அன்பு காட்டுங்கள் சிற்றேட்டின் இணைப்பு A-ல் இருக்கும் “நாம் சொல்லித்தர விரும்பும் உண்மைகள்” பகுதியிலிருந்து ஏதாவது ஒரு உண்மையைப் பற்றிப் பேசுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 3)
6. மறுபடியும் சந்திப்பது
(2 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. நீங்கள் சந்தர்ப்ப சாட்சி கொடுத்த ஒருவரை மறுபடியும் சந்தித்து அவர் கேட்டிருந்த கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 5)
7. சீஷர்களை உருவாக்குவது
(5 நிமி.) பொது ஊழியம். பைபிள் படிப்பு எப்படி இருக்கும் என்று நடத்திக் காட்டுங்கள், அடுத்த முறை படிப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள். (lmd பாடம் 10 குறிப்பு 3)
பாட்டு 84
8. பயிற்சி கொடுப்பதைப் பற்றி மூன்று முக்கியமான பாடங்கள்
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
யெகோவா கொடுத்திருக்கும் வேலைகளைச் செய்ய மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்க அன்பு நம்மைத் தூண்டுகிறது
மற்றவர்களுக்கு அருமையான விதத்தில் பயிற்சி கொடுத்த நிறைய பேரைப் பற்றி பைபிள் சொல்கிறது. உதாரணத்துக்கு, சாமுவேல் சவுலுக்குப் பயிற்சி கொடுத்தார், எலியா எலிசாவுக்குப் பயிற்சி கொடுத்தார், இயேசு தன் சீஷர்களுக்குப் பயிற்சி கொடுத்தார், பவுல் தீமோத்தேயுவுக்குப் பயிற்சி கொடுத்தார். அவர்கள் பயிற்சி கொடுத்த விதத்திலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். அதேசமயத்தில், பயிற்சி கொடுப்பதில் தலைசிறந்தவர் யெகோவாதான். அவரிடமிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
யெகோவாவைப் போல் பயிற்சி கொடுங்கள் (யோவா 5:20)—சில காட்சிகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
யெகோவா மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் விதத்திலிருந்து நாம் என்ன மூன்று பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடங்கள் 20-21