உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb25 செப்டம்பர் பக். 4-5
  • செப்டம்பர் 15-21

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • செப்டம்பர் 15-21
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
mwb25 செப்டம்பர் பக். 4-5

செப்டம்பர் 15-21

நீதிமொழிகள் 31

பாட்டு 135; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஒரு அம்மா தன் மகளோடு பாசமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்; அவர்கள் இரண்டு பேரும் சோஃபாவில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

1. ஒரு அம்மாவின் அன்பான ஆலோசனைகளிலிருந்து பாடங்கள்

(10 நிமி.)

செக்ஸ் மற்றும் திருமணத்தைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்று உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள் (நீதி 31:3, 10; w11 7/1 பக். 26 பாரா. 7-8)

மதுபானத்தை யெகோவா பார்க்கிற விதமாகப் பார்க்க உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள் (நீதி 31:4-6; ijwhf கட்டுரை 4 பாரா. 11-13)

யெகோவா மாதிரியே மற்றவர்களுக்கு உதவி செய்ய உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள் (நீதி 31:8, 9; g17.6 பக். 9 பாரா 5)

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • நீதி 31:26—இந்த வசனத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (w23.12 பக். 21 பாரா 12)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) நீதி 31:10-31 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. ஏதோ ஒன்றை அன்பாகச் சொன்ன அல்லது செய்த ஒருவரிடம் பேச ஆரம்பியுங்கள். (lmd பாடம் 5 குறிப்பு 3)

5. பேச ஆரம்பிப்பது

(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். அன்பு காட்டுங்கள் சிற்றேட்டின் இணைப்பு A-ல் இருக்கும் “நாம் சொல்லித்தர விரும்பும் உண்மைகள்” என்ற பகுதியிலிருந்து ஏதாவது ஒரு உண்மையைப் பற்றிப் பேசுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 4)

6. மறுபடியும் சந்திப்பது

(5 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் காவற்கோபுரம் எண் 1 2025-ஐ வாங்கிக்கொண்ட ஒருவரை விசேஷப் பேச்சுக்குக் கூப்பிடுங்கள். (lmd பாடம் 7 குறிப்பு 4)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 121

7. எலெக்ட்ரானிக் சாதனங்களை ஞானமாகப் பயன்படுத்த உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்

(8 நிமி.) கலந்துபேசுங்கள்.

சின்னப் பிள்ளைகள் ஃபோனையோ டேப்லெட்டையோ சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறீர்களா? பொதுவாக, பிள்ளைகள் இதில் பயங்கர கில்லாடிகள்! எலெக்ட்ரானிக் சாதனங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று யாரும் அவர்களுக்குச் சொல்லித்தர வேண்டியதே இல்லை. ஆனால், அவற்றை எப்படிப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், எலெக்ட்ரானிக் சாதனங்களை ஞானமாகப் பயன்படுத்த உங்கள் பிள்ளைகளுக்கு எப்படிச் சொல்லிக்கொடுக்கலாம்?

“நேரத்தை நன்றாகப் பயன்படுத்துங்கள்” வீடிHS-.25யோவில் வரும் ஒரு காட்சி: கடற்கரையில் படுத்துக்கொண்டு சோஃபியா தன் டேப்லெட்டைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்; கடலில் ஒரு டால்பின் ஒரு பந்தை வைத்து விளையாடுவதை அவள் கவனிக்கவில்லை.

நேரத்தை நன்றாகப் பயன்படுத்துங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • எலெக்ட்ரானிக் சாதனங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்று முன்பே வரம்புகளை வைப்பது ஏன் நல்லது?

  • வேறென்ன விஷயங்களுக்காக நாம் நேரத்தை ஒதுக்க வேண்டும்?

மற்ற பெற்றோர்கள் என்ன ரூல்ஸ் போடுகிறார்கள் என்பதை மட்டும் பார்த்து அதையே காப்பி அடிப்பதற்குப் பதிலாக பைபிள் நியமங்களை யோசித்துப் பார்த்து அவற்றின் அடிப்படையில் கட்டுப்பாடுகளைப் போடுங்கள். (கலா 6:5) உதாரணத்துக்கு, உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:

  • என்னுடைய பிள்ளை, எலெக்ட்ரானிக் சாதனங்களை அளவாகப் பயன்படுத்துகிறானா? என் ஃபோனையோ அல்லது அவனுக்காக ஒரு ஃபோனையோ கொடுக்கும் அளவுக்கு இந்த விஷயத்தில் பொறுப்பாக நடந்திருக்கிறானா?—1கொ 9:25

  • என்னுடைய பிள்ளை தனியாக இருக்கும்போது எலெக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்த என்னால் அனுமதிக்க முடியுமா?—நீதி 18:1

  • எந்தெந்த அப்ளிகேஷன்களையும் வெப்சைட்டுகளையும் பயன்படுத்த என்னுடைய பிள்ளையை அனுமதிக்கலாம், எதையெல்லாம் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது?—எபே 5:3-5; பிலி 4:8, 9

  • முக்கியமான, சந்தோஷமான மற்ற விஷயங்களுக்கும் என் பிள்ளைக்கு நேரம் இருக்க வேண்டுமென்றால், எலெக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்த எவ்வளவு நேரம் மட்டும் அவனை அனுமதிக்க வேண்டும்?—பிர 3:1

8. சபைத் தேவைகள்

(7 நிமி.)

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb பாடங்கள் 18-19

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 2; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்