பைபிளில் இருக்கும் புதையல்கள்
“உன்னுடைய மகனைத் தூக்கிக்கொள்”
சூனேமைச் சேர்ந்த பெண் எலிசாவை தன்னுடைய வீட்டில் தங்க வைத்து நன்றாகக் கவனித்துக்கொண்டாள் (2ரா 4:8-10)
யெகோவா அவளுக்கு ஒரு மகனைக் கொடுத்தார் (2ரா 4:16, 17; w17.12 பக். 4 பாரா 7)
எலிசா மூலமாக யெகோவா அவளுடைய மகனைத் திரும்ப உயிரோடு கொண்டுவந்தார் (2ரா 4:32-37; w17.12 பக். 5 பாரா 8)
உங்களுடைய பிள்ளையைப் பறிகொடுத்த துக்கத்தில் தவித்துக்கொண்டிருக்கிறீர்களா? உங்களுடைய வலி யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். சீக்கிரத்தில் உங்களுடைய பிள்ளையைத் அவர் திரும்ப உயிரோடு கொண்டுவருவார். (யோபு 14:14, 15) அந்த நாள் எவ்வளவு அருமையாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!