உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 நவம்பர் பக். 3
  • “கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • “ஏதாவது சேமித்து வையுங்கள்””
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 நவம்பர் பக். 3
வயதான ஒரு சகோதரி, டேப்லெட்டைப் பயன்படுத்தி ஆன்லைனில் நன்கொடை கொடுக்கிறார். படங்களின் தொகுப்பு: நம் நன்கொடைகள் பயன்படுத்தப்படும் விதங்கள். 1. பெத்தேலில் நடக்கும் அச்சடிப்பு. 2. தேவராஜ்யப் பள்ளிகள். 3. பொது ஊழியம். 4. கட்டுமான வேலைகள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

“கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்”

தாராள குணம் மற்றவர்களைத் தொற்றிக்கொள்ளும் என்று இயேசு சொன்னார். (லூ 6:38) கொடுப்பதை நீங்கள் பழக்கமாக்கிக்கொண்டால், உங்களைப் பார்த்து சகோதர சகோதரிகள்கூட தாராள குணத்தையும் அன்பையும் காட்டுவார்கள்.

சந்தோஷமாகக் கொடுப்பது நம் வணக்கத்தின் ஒரு பாகம். கஷ்டப்படுகிற சகோதர சகோதரிகளுக்குத் தாராளமாக உதவி செய்பவர்களை யெகோவா கவனிக்கிறார். அவர்களை ஆசீர்வதிப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்.—நீதி 19:17.

கொடுக்கிற பழக்கம் உங்களுக்கு இருப்பதற்காக நன்றியோடு இருக்கிறோம் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்ய உங்களுடைய நன்கொடைகள் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன?

  • கொஞ்சமோ அதிகமோ, கொடுப்பதை நாம் ஏன் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்?—“மிகுதியாக இருப்பது பற்றாக்குறையை ஈடுகட்டுகிறது” என்ற கட்டுரையை jw.org-ல் பாருங்கள்.

ஆன்லைனில் அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்

யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகளை ஆதரிக்க நீங்கள் எப்படியெல்லாம் நன்கொடை கொடுக்கலாம்? JW லைப்ரரியின் முதல் பக்கத்துக்குக் கீழே இருக்கும் “நன்கொடைகள்” என்ற லிங்க்கை கிளிக் செய்து வெப் பக்கத்துக்குச் செல்லுங்கள். நிறைய நாடுகளின் வெப் பக்கத்தில், FAQ என்ற பட்டன் இருக்கும். அதில் “யெகோவாவின் சாட்சிகளுக்கு நன்கொடை—அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்” என்ற டாக்குமென்ட் இருக்கும்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்