பைபிளில் இருக்கும் புதையல்கள்
பதவி வெறிபிடித்த அகங்காரி தண்டிக்கப்படுகிறாள்
யூதாவை ஆட்சி செய்ய வேண்டுமென்ற வெறியில் அத்தாலியாள் ராஜ வம்சத்தின் வாரிசுகளைத் தீர்த்துக்கட்டினாள் (2ரா 11:1; lfb பாடம் 53 பாரா. 1-2; “‘ஆகாபின் வம்சமே அடியோடு அழிந்துபோகும்’—2ரா 9:8” என்ற அட்டவணையைப் பாருங்கள்)
யோசேபாள், ராஜ வாரிசான யோவாசைக் காப்பாற்றி ஒளித்து வைத்தாள் (2ரா 11:2, 3)
தலைமைக் குருவான யோய்தா, யோவாசை ராஜாவாக்கினார்; அத்தாலியாளைக் கொன்றுபோட்டார்; இவள் ஆகாபின் வீட்டாரில் உயிரோடு இருந்த கடைசி நபராக இருந்திருக்கலாம் (2ரா 11:12-16; lfb பாடம் 53 பாரா. 3-4)
ஆழமாக யோசிக்க: நீதிமொழிகள் 11:21-லும் பிரசங்கி 8:12, 13-லும் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க உண்மை என்பதை இந்தப் பதிவு எப்படிக் காட்டுகிறது?