உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 நவம்பர் பக். 9
  • நம் கடின உழைப்பை யெகோவா மறப்பதில்லை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம் கடின உழைப்பை யெகோவா மறப்பதில்லை
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்க உங்களால் உதவ முடியும்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 நவம்பர் பக். 9
“யெகோவா மறக்கவே மாட்டார்” என்ற வீடியோவின் காட்சிகள். படங்களின் தொகுப்பு: 1. டேவிட் ஹிப்ஷ்மேனும் ஆப்ரீ பிவன்சும் கென்டக்கி தெருவில் விளம்பர அட்டைகளைப் போட்டுக்கொண்டு இருப்பதுபோல் நடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. அந்த அட்டைகள், “நிஜத்தை சந்தியுங்கள்” என்ற தலைப்பில் ஜோஸஃப் ரதர்ஃபோர்ட் கொடுத்த பேச்சை விளம்பரப்படுத்தியது. 2. சகோதரர் ஹிப்ஷ்மேன், குவாதமாலா கிளை அலுவலகக் குழுவைச் சேர்ந்த மற்ற சகோதரர்களைச் சந்தித்து பேசுகிறார். 3. ஒரு மாநாட்டில் சகோதர சகோதரிகளோடு சேர்ந்து சகோதரர் ஹிப்ஷ்மேன் போட்டோ எடுக்கிறார்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

நம் கடின உழைப்பை யெகோவா மறப்பதில்லை

கடின முயற்சி எடுத்து மற்றவர்களுக்காக நாம் ஏதாவது செய்யும்போது அதை அவர்கள் பெரிதாக நினைக்காமல் இருக்கலாம். சீக்கிரத்தில் அதை மறந்துகூட போகலாம். ஆனால் யெகோவா அப்படிச் செய்வாரா? நிச்சயம் செய்ய மாட்டார். அவருக்குச் சேவை செய்வதற்காக முழு மனதோடு நாம் எடுக்கும் முயற்சிகளை அவர் மறக்கவே மாட்டார். உடல்நிலை சரியில்லாததால் முன்புபோல் நம்மால் நிறைய செய்ய முடியவில்லை என்றாலும் அவர் நம்மைக் கைவிடவே மாட்டார்.—எபி 6:10.

யெகோவா மறக்கவே மாட்டார் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • யெகோவாவின் சேவையில் சகோதரர் ஹிப்ஷ்மேன் எப்படியெல்லாம் கடினமாக உழைத்திருக்கிறார்?

  • சகோதரர் ஹிப்ஷ்மேன் தன் மனைவியை இழந்தார், வயதானதால் தளர்ந்தும்போனார். ஆனாலும், அவரை மறக்கவில்லை என்பதை யெகோவா எப்படியெல்லாம் காட்டினார்?

  • முழுநேர சேவையைப் பொறுத்ததில் சகோதரர் ஹிப்ஷ்மேன் ஒரு செல்வந்தராக வாழ்ந்திருக்கிறார் என்று எப்படிச் சொல்லலாம்?—நீதி 10:22, அடிக்குறிப்பு

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்