கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யெகோவாவின் சாட்சிகளுக்கு இருக்கும் நல்ல பெயரை நான் காப்பாற்றுகிறேனா?
யெகோவாவின் சாட்சிகளுடைய நடத்தையை மற்றவர்கள் கவனிக்கிறார்கள். (1 கொ. 4:9) ‘என்னுடைய பேச்சும் நடத்தையும் யெகோவாவுக்கு புகழ் சேர்க்கிறதா?’ என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். (1 பே. 2:12) இத்தனை காலமாக யெகோவாவின் சாட்சிகள் எடுத்த நல்ல பெயரைக் கெடுத்துவிட நாம் நிச்சயம் விரும்ப மாட்டோம்.—பிர. 10:1.
பின்வரும் சூழ்நிலைமையில் ஒரு கிறிஸ்தவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும், அதற்கு எந்த பைபிள் நியமம் உதவும் என்பதை எழுதுங்கள்:
சத்தியத்தில் இல்லாத ஒருவர் உங்களைக் கோபமாக திட்டுகிறார்
உங்கள் உடை, கார், அல்லது வீடு அழுக்காக இருக்கிறது
உள்ளூர் அதிகாரிகள் போட்ட ஒரு சட்டம் உங்களுக்கு அநியாயமானதாக தெரிகிறது அல்லது அதற்குக் கீழ்ப்படிவது கஷ்டமாக இருக்கிறது
ரைட்டிங் டிபார்ட்மெண்டில் ஆராய்ச்சிக் குழுவில் சேவை செய்கிறவர்கள் நம்முடைய நல்ல பெயரை எப்படிக் காப்பாற்றுகிறார்கள்?
உண்மையான தகவல்களை நேசிக்கிறோம்; அதை மதிக்கிறோம் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
திருத்தமான தகவல்களைத் தருவதற்காக அமைப்பு எடுக்கிற முயற்சிகளில் உங்களுக்கு பிடித்தது எது?