உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 ஜனவரி பக். 14-15
  • பிப்ரவரி 26–மார்ச் 3

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிப்ரவரி 26–மார்ச் 3
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 ஜனவரி பக். 14-15

பிப்ரவரி 26–மார்ச் 3

சங்கீதம் 11-15

பாட்டு 139; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. சமாதானம் நிறைந்த புதிய உலகத்தில் நீங்கள் வாழ்வதாக கற்பனை செய்து பாருங்கள்

(10 நிமி.)

சட்டம் ஒழுங்கை மக்கள் மதிக்காததால் இன்றைய உலகம் வன்முறையால் நிறைந்திருக்கிறது (சங். 11:2, 3; w06 5/15 பக். 18 பாரா 3)

இந்த வன்முறைக்கெல்லாம் யெகோவா சீக்கிரத்தில் முடிவுகட்டுவார் என்பதில் நாம் நம்பிக்கையாக இருக்கலாம் (சங். 11:5; wp16.3 பக். 13)

யெகோவா கொடுக்கப்போகும் எதிர்கால ஆசீர்வாதங்களைப் பற்றி யோசித்துப் பார்ப்பது புதிய உலகத்துக்காக பொறுமையோடு காத்திருக்க நமக்கு உதவும் (சங். 13:5, 6; w17.08 பக். 6 பாரா 15)

ராத்திரியில் ஒரு பெண் காட்டில் உள்ள மரத்தடியில் நிம்மதியாகத் தூங்குகிறாள். அந்த மரத்தின் மேலே ஒரு சிறுத்தை படுத்திருக்கிறது.

இதைச் செய்து பாருங்கள்: எசேக்கியேல் 34:25-ஐ வாசித்துவிட்டு, அங்கே விவரிக்கப்பட்டுள்ள சமாதானமான சூழலில் நீங்கள் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள்.—kr 236 பாரா 16.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங். 14:1—இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது போல் கிறிஸ்தவர்களும் எப்படி நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது? (w13 9/15 பக். 19 பாரா 12)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங். 13:1–14:7 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(2 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. நினைவுநாள் நிகழ்ச்சிக்கு ஒருவரை அழையுங்கள். (lmd பாடம் 5 குறிப்பு 3)

5. பேச்சை ஆரம்பிப்பது

(1 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். நினைவுநாள் நிகழ்ச்சிக்கு ஒருவரை அழையுங்கள். (lmd பாடம் 3 குறிப்பு 4)

6. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். நினைவுநாள் அழைப்பிதழை ஒருவருக்கு கொடுக்கும்போது அவர் ஆர்வம் காட்டுகிறார். (lmd பாடம் 7 குறிப்பு 4)

7. சீஷராக்குவது

(5 நிமி.) lff பாடம் 13 சுருக்கம், ஞாபகம் வருகிறதா? மற்றும் குறிக்கோள். பொய் மதத்தை கடவுள் ஏன் வெறுக்கிறார் என்பதை உங்கள் மாணவருக்குப் புரிய வைக்க “அலசிப் பாருங்கள்” பகுதியில் இருக்கும் ஒரு கட்டுரையைப் பயன்படுத்துங்கள். (th படிப்பு 12)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 8

8. “போர் ஆயுதங்களைவிட ஞானம் சிறந்தது”

(10 நிமி.) கலந்துபேசுங்கள்.

“விசுவாசம் இல்லாதவர்களை அல்ல, விசுவாசம் உள்ளவர்களைப் பின்பற்றுங்கள்—லாமேக்கை அல்ல, ஏனோக்கை” என்ற வீடியோவில் வரும் அப்பா பைபிளை வாசித்துவிட்டு அதைப் பற்றி யோசித்துப் பார்க்கிறார். ஆயுதம் ஏந்திய ஆட்கள் ஏனோக்கைத் தேடி அலையும்போது அவர் குகைக்குள் ஒளிந்துகொண்டிருப்பதை மனக்கண்ணில் பார்க்கிறார்.

உலகம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. வன்முறையைப் பார்க்கும் போதும், அதனால் பாதிக்கப்படும் போதும் நாம் ரொம்பவே கவலைப்படுவோம் என்று யெகோவாவுக்கு தெரியும். நமக்கு பாதுகாப்பு தேவை என்பதும் அவருக்கு தெரியும். நம்மை பாதுகாப்பதற்காக அவர் பயன்படுத்துகிற ஒரு வழி, அவருடைய வார்த்தையான பைபிள்.—சங். 12:5-7.

பைபிளில் இருக்கும் ஞானம் ‘போர் ஆயுதங்களைவிட சிறந்தது.’ (பிர. 9:18) வன்முறைக்கு இரையாகாமல் இருக்க பின்வரும் பைபிள் நியமங்கள் நமக்கு எப்படி உதவும் என்று யோசித்துப் பாருங்கள்.

  • பிர. 4:9, 10—பாதுகாப்பில்லாத இடங்களில் தனியாக இருப்பதைத் தவிருங்கள்

  • நீதி. 22:3—பொது இடங்களில் இருக்கும்போது உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனமாக இருங்கள்

  • நீதி. 26:17—உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள்

  • நீதி. 17:14—வன்முறை வெடிக்கும் என்பதற்கான அறிகுறி தெரிந்தால் அந்த இடத்தை விட்டுப் போய்விடுங்கள். போராட்டத்துக்காக திரண்டு வந்திருக்கும் கும்பலுக்குப் பக்கத்திலேயே போய்விடாதீர்கள்

  • லூக். 12:15—பணம், பொருளை பாதுகாப்பதற்காக நீங்கள் ஆபத்தில் போய் மாட்டிக்கொள்ளாதீர்கள்

விசுவாசம் இல்லாதவர்களை அல்ல, விசுவாசம் உள்ளவர்களைப் பின்பற்றுங்கள்—லாமேக்கை அல்ல, ஏனோக்கை என்ற வீடியோவைக் காட்டுங்கள். பின்பு இந்தக் கேள்வியைக் கேளுங்கள்:

வன்முறை நிறைந்த இடத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு அப்பாவுக்கு ஞானமாக நடக்கவும் நல்ல தீர்மானங்கள் எடுக்கவும் ஏனோக்கின் உதாரணம் எப்படி உதவியது?—எபி. 11:5

சில சந்தர்ப்பங்களில், ஒரு கிறிஸ்தவர் தன்னையும் தன் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக சில காரியங்களை செய்ய வேண்டியது அவசியம் என்று நினைக்கலாம். ஆனால் அதற்காக, ஒருவரைக் கொல்லும் அளவுக்கு அவர் துணியவே மாட்டார்.—சங். 51:14; ஜூலை 2017 காவற்கோபுரத்தில் வந்த, “வாசகர் கேட்கும் கேள்விகள்” பகுதியைப் பாருங்கள்.

9. மார்ச் 2, சனிக்கிழமை முதல் நினைவுநாள் அழைப்பிதழைக் கொடுப்போம்

(5 நிமி.) மூப்பர் கொடுக்கும் பேச்சு. அழைப்பிதழைக் கொடுப்பதற்காகவும் விசேஷ பேச்சுக்காகவும் நினைவுநாள் நிகழ்ச்சிக்காகவும் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், 15 மணிநேரம் ஊழியம் செய்து துணைப் பயனியராக சேவை செய்யலாம் என்பதை நினைப்பூட்டுங்கள்.

10. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 6 பாரா. 9-17

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 40; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்