உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 செப்டம்பர் பக். 2-3
  • செப்டம்பர் 2-8

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • செப்டம்பர் 2-8
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 செப்டம்பர் பக். 2-3

செப்டம்பர் 2-8

சங்கீதம் 79-81

பாட்டு 29; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. யெகோவாவின் மகிமையான பெயரை நேசியுங்கள்

(10 நிமி.)

யெகோவாவுடைய பெயரைக் கெடுக்கும் விஷயங்களை செய்யாதீர்கள் (சங் 79:9; w17.02 பக். 9 பாரா 5)

யெகோவாவின் பெயரை சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள் (சங் 80:18; ijwbv கட்டுரை 3 பாரா. 4-5)

யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தால்... அவருடைய பெயரை நேசித்தால்... அவர் நம்மைப் பெரியளவில் ஆசீர்வதிப்பார் (சங் 81:13, 16)

இடைவேளை சமயத்தில் ஒரு சகோதரர், கூட வேலை செய்கிறவருக்கு jw.org கான்டாக்ட் கார்டைக் கொடுக்கிறார்.

நாம் ஒரு யெகோவாவின் சாட்சி என்பது மற்றவர்களுக்குத் தெரிந்திருந்தால்தான் நாம் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து மக்கள் யெகோவாவைப் புகழ்வார்கள்

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 80:1—இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களையும் ஒட்டுமொத்தமாகக் குறிப்பதற்கு சிலசமயம் ஏன் யோசேப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது? (it-2-E பக். 111)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 79:1–80:7 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(1 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். பைபிள் படிப்பைப் பற்றி சொல்லுங்கள். (lmd பாடம் 4 குறிப்பு 4)

5. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. பைபிள் படிப்பைப் பற்றி சொல்லுங்கள். (lmd பாடம் 4 குறிப்பு 3)

6. பேச்சை ஆரம்பிப்பது

(2 நிமி.) பொது ஊழியம். பைபிள் படிப்பைப் பற்றி சொல்லுங்கள். (lmd பாடம் 3 குறிப்பு 3)

7. மறுபடியும் சந்திப்பது

(5 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். முன்பு நல்ல செய்தியை ஆர்வமாகக் கேட்ட, ஆனால் பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளாத ஒருவருக்கு இப்போது பைபிள் படிப்பைப் பற்றி சொல்லுங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 3)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 10

8. “அவர்கள் என் பெயரைப் பரிசுத்தப்படுத்துவார்கள்”

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

யெகோவாவின் பெயரைக் கெடுக்கும் வேலையை சாத்தான் ஏதேன் தோட்டத்தில் ஆரம்பித்தான். அப்போதிலிருந்து, மனிதர்களும் தேவதூதர்களும் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது. யெகோவாவின் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்குவதில் அவர் பக்கம் நிற்பார்களா இல்லையா என்பதுதான் அந்த முடிவு.

யெகோவாவைப் பற்றி சாத்தான் நிறைய மோசமான பொய்களை சொல்லியிருக்கிறான். அதில் சிலவற்றை இப்போது பார்க்கலாம். யெகோவா ரொம்ப கொடூரமானவர், அவர் அன்பே இல்லாத கடவுள் என்றெல்லாம் அபாண்டமாகப் பழிபோடுகிறான். (ஆதி 3:1-6; யோபு 4:18, 19) யெகோவாவின் ஊழியர்களுக்கு அவர்மேல் உண்மையான அன்பு இல்லையென்று அவன் வாதாடுகிறான். (யோபு 2:4, 5) அதுமட்டுமல்ல, நாம் வாழும் இந்த அழகான பூமியை யெகோவா படைக்கவில்லை என்று சொல்லி லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்.—ரோ 1:20, 21.

இதையெல்லாம் கேட்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது? யெகோவாவின் பக்கம் நின்று, அவரைப் பற்றி சாத்தான் சொல்வதெல்லாம் பொய் என்று நிரூபித்து காட்ட வேண்டும் என்று தோன்றுகிறது, இல்லையா? தன்னுடைய மக்கள் தன் பெயரைப் பரிசுத்தப்படுத்துவார்கள் என்று யெகோவாவுக்குத் தெரியும். (ஏசாயா 29:23) அதை நீங்கள் எப்படி செய்யலாம்?

  • யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும் அவரை நேசிப்பதற்கும் மற்றவர்களுக்கு உதவுங்கள். (யோவா 17:25, 26) யெகோவா நிஜமாகவே இருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்கு எப்போதும் தயாராக இருங்கள். அவருடைய அருமையான குணங்களைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.—ஏசா 63:7

  • யெகோவாவை முழு இதயத்தோடு நேசியுங்கள். (மத் 22:37, 38) அவர் கொடுத்திருக்கிற கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். அவற்றுக்குக் கீழ்ப்படிந்தால் உங்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதற்காக மட்டுமல்ல, யெகோவாவை சந்தோஷப்படுத்துவதற்காக அப்படி செய்யுங்கள்.—நீதி 27:11

படத்தொகுப்பு: “அன்பு ஒருபோதும் ஒழியாது . . . பள்ளியில் மோசமான சூழல் இருந்தாலும்” என்ற வீடியோவில் இருக்கும் படங்கள். 1. ஏரியல் தன்னுடைய இடத்தில் உட்கார்ந்திருக்கிறாள். அவள் ஏன் கொடி வணக்கம் செய்வதில்லை என்று அவளை கைகாட்டி ஒரு பையன் கேட்கிறான். 2. பைபிளிலிருந்தும், “பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்” புத்தகத்தின் பாடம் 61-லிருந்தும் அவள் தனிப்பட்ட படிப்பு படிக்கிறாள். 3. தன்னுடைய வகுப்பில் இருக்கும் எல்லார் முன்பாகவும் நின்று சாட்சிக் கொடுக்கிறாள். 4. கூட படிக்கும் ஒருவன், டியேகோவுக்கு ஈ-சிகரெட்டைக் கொடுக்கிறான். 5. டேப்லெட்டைப் பயன்படுத்தி அவன் ஆராய்ச்சி செய்கிறான். 6. தன்னம்பிக்கையோடு சிரித்தபடி பள்ளியிலிருந்து அவன் நடந்து வருகிறான்.

அன்பு ஒருபோதும் ஒழியாது . . . பள்ளியில் மோசமான சூழல் இருந்தாலும் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:

  • ஏரியலும் டியேகோவும் எப்படி யெகோவாவை ஆதரித்து பேசினார்கள்?

  • யெகோவாவின் பக்கம் நிற்க வேண்டும் என்று அவர்கள் ஏன் நினைத்தார்கள்?

  • நாம் எப்படி அவர்களைப் போலவே நடந்துகொள்ளலாம்?

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 15 பாரா. 1-7, பகுதி 6-க்கான அறிமுகம்

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 90; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்