உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb25 ஜனவரி பக். 14-15
  • பிப்ரவரி 24–மார்ச் 2

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிப்ரவரி 24–மார்ச் 2
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
mwb25 ஜனவரி பக். 14-15

பிப்ரவரி 24–மார்ச் 2

நீதிமொழிகள் 2

பாட்டு 35; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. தனிப்பட்ட படிப்பை ஏன் ஆசை ஆசையாகப் படிக்க வேண்டும்?

(10 நிமி.)

சத்தியத்தை உயர்வாக மதிக்கிறீர்கள் என்பதைக் காட்டுவதற்காக (நீதி 2:3, 4; w22.08 பக். 18 பாரா 16)

நல்ல முடிவுகளை எடுப்பதற்காக (நீதி 2:5-7; w22.10 பக். 19 பாரா. 3-4)

உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்காக (நீதி 2:11, 12; w16.09 பக். 23-24 பாரா. 2-3)

ஒரு இஸ்ரவேலர் ஒரு குகைக்குள், கோடாலியை வைத்து பாறையைக் குடைகிறார்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘தனிப்பட்ட படிப்பைத் தவறாமலும் இன்னும் நன்றாகவும் படிக்க நான் என்னவெல்லாம் செய்யலாம்?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • நீதி 2:7—யெகோவா எப்படி “உத்தமமாய் நடப்பவர்களுக்கு . . . கேடயம்போல் இருக்கிறார்”? (it-1-E பக். 1211 பாரா 4)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) நீதி 2:1-22 (th படிப்பு 12)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். தம்பதிகளுக்கு உதவும் விஷயங்களை jw.org வெப்சைட்டில் எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று ஒருவருக்குக் காட்டுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 3)

5. மறுபடியும் சந்திப்பது

(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. போன முறை எந்த விஷயத்தில் ஒருவர் ஆர்வம் காட்டினாரோ அது சம்பந்தப்பட்ட ஒரு பத்திரிகையைக் கொடுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 3)

6. பேச்சு

(5 நிமி.) lmd இணைப்பு A குறிப்பு 8—பொருள்: கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும். (th படிப்பு 13)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 96

7. உங்களுக்குப் புதையலைக் கண்டுபிடிக்க பிடிக்குமா?

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

பிள்ளைகளே, புதையலைக் கண்டுபிடிக்க உங்களுக்குப் பிடிக்குமா? அப்படியென்றால், இந்த உலகத்தில் இருப்பதிலேயே ஒரு பெரிய புதையல் பைபிளில் புதைந்திருக்கிறது! அதுதான் கடவுளைப் பற்றிய அறிவு! (நீதி 2:4, 5) இந்தப் புதையலை உங்களாலும் கண்டுபிடிக்க முடியும். எப்படி? நேரமெடுத்து பைபிளைத் தவறாமல் படியுங்கள், படிப்பதை ஆழமாக ஆராய்ச்சி செய்து பாருங்கள். அப்படிப் படிக்கும்போது உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கும், நிறைய விஷயங்களையும் கற்றுக்கொள்வீர்கள்.

  • பைபிளைப் படிக்கும்போது உங்களையே நீங்கள் என்னவெல்லாம் கேட்டுக்கொள்ளலாம்? (w24.02 பக். 32 பாரா. 2-3)

  • பதில்களைக் கண்டுபிடிக்க என்னென்ன கருவிகளை நீங்கள் பயன்படுத்தலாம்?

ஒரு சின்ன பையன் ஒரு ஆராய்ச்சியாளரைப்போல் உடை உடுத்தியிருக்கிறான், ஒரு புதையல் பெட்டியை ஆர்வமாகத் திறக்கிறான்.

பைபிளில் படிக்கும் விஷயங்களை எப்படி ஆழமாக யோசித்துப் பார்க்கலாம் என்று தெரிந்துகொள்ள யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள் என்ற வீடியோ தொடர் உங்களுக்கு உதவும்.

ஒரு சின்ன பையன் தனிப்பட்ட படிப்பு படிக்கிறான். “உயிர் படைக்கப்பட்டதா?” என்ற ஆங்கில சிறுபுத்தகம் அவனுடைய டேபிளில் இருக்கிறது.

யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்—ஆபேல் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

ஆதியாகமம் 4:2-4 மற்றும் எபிரெயர் 11:4-ஐ வாசியுங்கள். பிறகு, இப்படிக் கேளுங்கள்:

  • ஆபேல், யெகோவாவுடைய ஃபிரெண்டு என்பதை எப்படிக் காட்டினார்?

  • ஆபேலுக்கு யெகோவாமேல் எப்படி விசுவாசம் வந்தது?

  • யெகோவாமேல் இருக்கிற விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?

டிப்ஸ்

பைபிளைப் படிக்கும்போது, அதில் வரும் மக்கள், இடங்கள், பொருள்களைப் பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்யுங்கள்; உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயங்களைக்கூட இன்னும் ஆராய்ச்சி செய்து பாருங்கள். அப்போது, பைபிளை ரசித்துப் படிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்!

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 23 பாரா. 1-8 மற்றும் பகுதி 8-க்கான அறிமுகம்

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 102; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்