மார்ச் 3-9
நீதிமொழிகள் 3
பாட்டு 8; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. யெகோவாவை நம்புங்கள்
(10 நிமி.)
உங்களை அல்ல, யெகோவாவை நம்புங்கள் (நீதி 3:5; ijwbv கட்டுரை 14 பாரா. 4-5)
யெகோவாவுடைய வழிநடத்துதலைத் தேடுவதன் மூலமாகவும், அதன்படி செய்வதன் மூலமாகவும் அவர்மேல் இருக்கும் நம்பிக்கையைக் காட்டுங்கள் (நீதி 3:6; ijwbv கட்டுரை 14 பாரா. 6-7)
அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையோடு இருக்காதீர்கள் (நீதி 3:7; be பக். 76 பாரா 4)
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் செய்கிற ஒவ்வொரு விஷயத்திலும் யெகோவாவின் வழிநடத்துதலைத் தேடுகிறேனா?’
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
நீதி 3:3—மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் நாம் எப்படி நம் கழுத்தில் கட்டிக்கொண்டு, இதயப் பலகையில் எழுதிக்கொள்ளலாம்? (w06 9/15 பக். 17 பாரா 7)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) நீதி 3:1-18 (th படிப்பு 12)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். பொதுவான ஒரு ஆட்சேபணைக்குப் பதில் சொல்லுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 5)
5. பேச ஆரம்பிப்பது
(4 நிமி.) பொது ஊழியம். jw.org-ஐப் பற்றி ஒருவரிடம் சொல்லி, அவருக்கு கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (lmd பாடம் 3 குறிப்பு 3)
6. பேச்சு
(5 நிமி.) w11 3/15 பக். 14 பாரா. 7-10—பொருள்: ஊழியத்தில் மக்கள் அலட்சியம் செய்யும்போது யெகோவாமேல் நம்பிக்கை வையுங்கள். (th படிப்பு 20)
பாட்டு 124
7. யெகோவாவின் அமைப்புமேல் நம்பிக்கை வையுங்கள்
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு எழுதப்பட்ட பைபிளின் ஆலோசனைகளை நம்புவது நமக்கு சுலபமாக இருக்கலாம். ஆனால், முன்நின்று வழிநடத்தும் பாவ இயல்புள்ள சகோதரர்கள் தரும் ஆலோசனைகளை நம்புவது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். அதுவும், அவர்கள் தரும் ஆலோசனைகள் நமக்குப் புரியாதபோது அல்லது அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாதபோது அவற்றை நம்புவது நமக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கலாம்.
மல்கியா 2:7-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
யெகோவா தன்னுடைய மக்களை வழிநடத்துவதற்கு பாவ இயல்புள்ள மனிதர்களைப் பயன்படுத்துவதை நினைத்து நாம் ஏன் ஆச்சரியப்பட வேண்டியதில்லை?
மத்தேயு 24:45-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
யெகோவாவின் அமைப்பு தரும் வழிநடத்துதலை நாம் ஏன் நம்பலாம்?
எபிரெயர் 13:17-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
நம்மை வழிநடத்தும் பொறுப்பை யெகோவா யாரை நம்பிக் கொடுத்திருக்கிறாரோ அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நாம் ஏன் ஆதரவு கொடுக்க வேண்டும்?
2021 ஆளும் குழுவின் அறிக்கை #9—சில காட்சிகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
கோவிட் பெருந்தொற்று சமயத்தில் கிடைத்த அறிவுரைகள், யெகோவாவின் அமைப்புமேல் உங்களுக்கு இருந்த நம்பிக்கையை எப்படிப் பலப்படுத்தின?
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 23 பாரா. 9-15, பக். 184, 186-ன் பெட்டிகள்