உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb25 மே பக். 12-13
  • ஜூன் 16-22

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூன் 16-22
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
mwb25 மே பக். 12-13

ஜூன் 16-22

நீதிமொழிகள் 18

பாட்டு 90; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. உடல்நலப் பிரச்சினைகளோடு போராடுகிறவர்களை உற்சாகப்படுத்துங்கள்

(10 நிமி.)

நீங்கள் பேசும் வார்த்தைகளில் கடவுளுடைய ஞானம் தெரியட்டும் (நீதி 18:4; w22.10 பக். 22 பாரா 17)

அவர்கள் அனுபவிக்கிற கஷ்டங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் (நீதி 18:13; mrt கட்டுரை 19, பெட்டி)

ஒரு நல்ல நண்பராக இருந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுங்கள், பொறுமையைக் காட்டுங்கள் (நீதி 18:24; wp23.1 பக். 14 பாரா 3–பக். 15 பாரா 1)

மனைவி மனம்விட்டுப் பேசுவதைக் கணவர் அனுதாபத்தோடு கவனித்துக் கேட்கிறார்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னுடைய துணை உடல்நல அல்லது மனநலப் பிரச்சினையோடு போராடிக்கொண்டிருந்தால் அவருக்கு நான் எப்படி உதவி செய்யலாம்?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • நீதி 18:18—பைபிள் காலங்களில் எதற்காகக் குலுக்கல் போட்டார்கள்? (it-2 பக். 271-272)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) நீதி 18:1-17 (th படிப்பு 11)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(1 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். நீங்கள் சந்திக்கும் நபர் வேறொரு மொழியைப் பேசுகிறார். (lmd பாடம் 2 குறிப்பு 5)

5. மறுபடியும் சந்திப்பது

(3 நிமி.) பொது ஊழியத்தில் பார்த்த ஒருவரை மறுபடியும் சந்தியுங்கள். அவர் உங்களைச் சுருக்கமாகப் பேசச் சொல்கிறார். (lmd பாடம் 7 குறிப்பு 4)

6. மறுபடியும் சந்திப்பது

(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி கொடுத்தபோது பார்த்த ஒருவரை மறுபடியும் சந்தியுங்கள். கடவுளுடைய அரசாங்கம் செய்யப்போகும் ஒரு விஷயத்தைப் பற்றி அவருக்குச் சொல்லிக்கொடுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 5)

7. நம்பிக்கைகளை விளக்குவது

(4 நிமி.) நடிப்பு. ijwfq கட்டுரை 29—பொருள்: யெகோவாவின் சாட்சிகள் படைப்புக் கோட்பாட்டை நம்புகிறார்களா?(lmd பாடம் 5 குறிப்பு 5)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 144

8. யெகோவாவிடம் நெருங்கிவர உங்கள் அன்பானவர்களுக்கு உதவுங்கள்—“ஒரு வார்த்தைகூட சொல்லாமலேயே”!

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

நமக்கு நெருக்கமான ஒருவர் இப்போது யெகோவாவை வணங்காமல் இருக்கலாம். அவர் ஒருவேளை நம் துணையாகவோ, பிள்ளையாகவோ, அல்லது சபையைவிட்டு விலகிப்போன நெருங்கிய நண்பராகவோ இருக்கலாம். அவர் எப்படியாவது யெகோவாவை வணங்க ஆரம்பிக்க வேண்டும் என்ற துடிப்பில் அவரை ரொம்பவே கட்டாயப்படுத்துகிற மாதிரி பேசியிருக்கிறீர்களா? அல்லது சாதுரியம் இல்லாமல் நேரடியாகப் பேசியிருக்கிறீர்களா? நாம் நல்லது செய்யத்தான் நினைக்கிறோம் என்றாலும், நாம் பேசும் வார்த்தைகள் நிலைமையை மோசமாக்கிவிடலாம். (நீதி 12:18) அப்படியென்றால், வேறென்ன செய்வது உதவியாக இருக்கும்?

யெகோவாவை வணங்காத கணவர், “[மனைவி] ஒரு வார்த்தைகூட சொல்லாமலேயே . . . விசுவாசியாக ஆகலாம்” என்று 1 பேதுரு 3:1, 2 சொல்கிறது. ஒரு சகோதரியின் கணவருக்கு பைபிள் உண்மைகளைப் பற்றிக் கலந்துபேச விருப்பமில்லை என்றால்கூட, அவர் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள அந்த சகோதரியால் உதவ முடியும். அந்த சகோதரி பைபிள் சொல்கிற மாதிரி அன்பாக, கனிவாக, ஞானமாக நடந்துகொள்ளும்போது அவருடைய கணவர் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படலாம். (நீதி 16:23) நம்முடைய நல்ல நடத்தையும் கனிவான பேச்சும் யெகோவாவை வணங்காத நம்முடைய அன்பானவர்களின் மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தலாம்.—கொலோ 4:6.

விசுவாசத்துக்காகப் போராடுகிறவர்கள்—சத்தியத்தில் இல்லாத மணத்துணையோடு வாழ்கிறவர்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

    “விசுவாசத்துக்காகப் போராடுகிறவர்கள்​—⁠சத்தியத்தில் இல்லாத மணத்துணையோடு வாழ்கிறவர்கள்” என்ற வீடிHS-.25யோவிலிருந்து ஒரு காட்சி. சகோதரி ஹிடேகோ சசாகி.
  • சகோதரி சசாகியின் அனுபவத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • “விசுவாசத்துக்காகப் போராடுகிறவர்கள்​—⁠சத்தியத்தில் இல்லாத மணத்துணையோடு வாழ்கிறவர்கள்” என்ற வீடிHS-.25யோவிலிருந்து ஒரு காட்சி. சகோதரி நொரிகோ இத்தோ.
  • சகோதரி இத்தோவின் அனுபவத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • “விசுவாசத்துக்காகப் போராடுகிறவர்கள்​—⁠சத்தியத்தில் இல்லாத மணத்துணையோடு வாழ்கிறவர்கள்” என்ற வீடிHS-.25யோவிலிருந்து ஒரு காட்சி. சகோதரி தொமோயெ ஒகாடா.
  • சகோதரி ஒகாடாவின் அனுபவத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 27 பாரா. 23-26, பக். 214, 217-ல் இருக்கும் பெட்டிகள்

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 60; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்