ஜூன் 30–ஜூலை 6
நீதிமொழிகள் 20
பாட்டு 131; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. நல்லபடியாக டேட்டிங் செய்வது எப்படி?
(10 நிமி.)
டேட்டிங்கை யெகோவா பார்க்கும் விதமாகப் பாருங்கள் (நீதி 20:24, 25; w24.05 பக். 26-27 பாரா. 3-4)
ஒருவரை டேட்டிங் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பே அவரைக் கவனியுங்கள் (நீதி 20:18; w24.05 பக். 22 பாரா 8)
டேட்டிங் செய்யும்போது ஒருவரையொருவர் நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் (நீதி 20:5; w24.05 பக். 28 பாரா. 7-8)
ஞாபகத்தில் வையுங்கள்: சரியான முடிவை எடுத்திருக்கிறவர்கள் நன்றாக டேட்டிங் செய்திருக்கிறார்கள்—கல்யாணம் செய்ய முடிவெடுத்திருந்தாலும் சரி, பிரிந்துபோக முடிவெடுத்திருந்தாலும் சரி!
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
நீதி 20:27—“மனிதன் வெளிவிடுகிற மூச்சுக்காற்று யெகோவாவின் விளக்கு” என்று எப்படிச் சொல்லலாம்? (it-2 பக். 196 பாரா 7)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) நீதி 20:1-15 (th படிப்பு 5)
4. பேச ஆரம்பிப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். சமீபத்தில் வேறொரு நாட்டிலிருந்து அல்லது ஊரிலிருந்து குடிமாறி வந்திருப்பதாக ஒருவர் சொல்கிறார். (lmd பாடம் 3 குறிப்பு 3)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) பொது ஊழியத்தில் பார்த்த ஒருவரை மறுபடியும் சந்தியுங்கள். JW லைப்ரரியைப் பற்றிச் சொல்லி, அதை அவருடைய எலெக்ட்ரானிக் சாதனத்தில் டவுன்லோட் செய்ய உதவுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 5)
6. நம்பிக்கைகளை விளக்குவது
(4 நிமி.) நடிப்பு. ijwbq கட்டுரை 159—பொருள்: மிருகங்கள் சொர்க்கத்துக்குப் போகுமா? (lmd பாடம் 3 குறிப்பு 4)
பாட்டு 78
7. பைபிள் படிப்பை முயற்சி செய்து பார்க்க மற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள்
(5 நிமி.) கலந்துபேசுங்கள்.
பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்வது நம்முடைய ஊழியத்தின் முக்கியமான ஒரு பாகம். நாம் மற்றவர்களுக்குப் பைபிளைப் பற்றிச் சொல்லித்தரவில்லை என்றால் நம்மால் அவர்களைச் சீஷர்களாக்கவே முடியாது, இல்லையா? (ரோ 10:13-15) வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி நேரடியாகச் சொல்வதை நீங்கள் ஒரு குறிக்கோளாக வைக்கலாம். முதலில், நீங்கள் சந்திக்கும் நபருக்கு எந்த விஷயத்தில் ஆர்வம் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். பின்பு, அவருடைய மனதில் இருக்கும் கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்க பைபிள் படிப்பு எப்படி உதவும் என்று விளக்குங்கள். அவருடைய வாழ்க்கைக்கு அது எப்படியெல்லாம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விளக்குங்கள்.
jw.org-ல் இருக்கும் “எங்களோடு பைபிளைப் படித்துப் பாருங்கள்” என்ற லிங்க்கைப் பயன்படுத்தி நீங்கள் சந்திக்கும் நபருக்கு பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள்.
பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்ல “எங்களோடு பைபிளைப் படித்துப் பாருங்கள்” என்ற லிங்க்கை நீங்கள் எப்படிப் பயன்படுத்தலாம்?
நீங்கள் இருக்கும் இடத்தில், பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி எந்த விதங்களில் சொல்வது பலன் தந்திருக்கிறது?
8. ஜூன் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள்
(10 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள்.
9. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 28 பாரா. 8-15