உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb25 ஜூலை பக். 4-5
  • ஜூலை 14-20

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூலை 14-20
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2025
mwb25 ஜூலை பக். 4-5

ஜூலை 14-20

நீதிமொழிகள் 22

பாட்டு 79; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. பிள்ளைகளை வளர்க்க உதவும் ஞானமான ஆலோசனைகள்

(10 நிமி.)

பிரச்சினைகளைச் சமாளிக்க உங்கள் பிள்ளைகளை முன்கூட்டியே தயார்படுத்துங்கள் (நீதி 22:3; w20.10 பக். 27 பாரா 7)

பிள்ளைகள் பிறந்ததுமே பயிற்சி கொடுக்க ஆரம்பியுங்கள் (நீதி 22:6; w19.12 பக். 26 பாரா. 17-19)

அன்பான விதத்தில் கண்டித்துத் திருத்துங்கள் (நீதி 22:15; w06 4/1 பக். 9 பாரா 4)

ஒரு அப்பா தன் மகளுக்கு பைபிளிலிருந்து அன்பாக எடுத்துக் காட்டிப் பேசுகிறார். அவள் கையில் வைத்திருக்கும் டேப்லெட்டில் பரிணாமத்தின் ஒவ்வொரு படியும் காட்டப்பட்டுள்ளது.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • நீதி 22:29—சபை பொறுப்புகளைச் செய்யும்போது இந்த நீதிமொழி சொல்வதுபோல் நாம் எப்படி நடந்துகொள்ளலாம், அதனால் என்ன நன்மைகள் கிடைக்கும்? (w21.08 பக். 22 பாரா 11)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) நீதி 22:1-19 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். (lmd பாடம் 5 குறிப்பு 4)

5. பேச ஆரம்பிப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. பெற்றோர்களுக்கு உதவும் தகவல்களை jw.org-ல் எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று காட்டுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 4)

6. பேச்சு

(5 நிமி.) ijwyp கட்டுரை 100—பொருள்: அப்பா-அம்மா போடுகிற சட்டத்தை நான் மீறிவிட்டால்... (th படிப்பு 20)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 134

7. பிள்ளைகளிடம் பொறுமையாக இருங்கள், ஆனால் அவர்கள் போகிற போக்கில் விட்டுவிடாதீர்கள்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

பிள்ளைகளை வளர்க்க நிறைய பொறுமை தேவை. பிள்ளைகளுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கிறது என்று பெற்றோர்கள் நேரமெடுத்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அதோடு, அரக்கப்பரக்க இல்லாமல் சாவகாசமாகப் பிள்ளைகளோடு நேரம் செலவிட வேண்டும். (உபா 6:6, 7) பிள்ளைகளுடைய மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள பெற்றோர்கள் அவர்களிடம் கேள்விகள் கேட்க வேண்டும், பிறகு அவர்கள் சொல்வதை நன்றாகக் கவனிக்க வேண்டும். (நீதி 20:5) சிலசமயம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் திரும்பத் திரும்ப அறிவுரை சொல்ல வேண்டியிருக்கலாம். அப்போதுதான் பிள்ளைகளால் அதைப் புரிந்துகொண்டு அதன்படி நடக்க முடியும்.

ஆனால், பெற்றோர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பிள்ளைகளை அவர்களுடைய போக்கிலேயே விட்டுவிட வேண்டும் என்றில்லை. எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்று பிள்ளைகளுக்குச் சொல்வதற்கும், அவர்கள் தப்பு செய்யும்போது கண்டித்துத் திருத்துவதற்கும் பெற்றோர்களுக்கு யெகோவா அதிகாரம் கொடுத்திருக்கிறார்.—நீதி 6:20; 23:13.

எபேசியர் 4:31-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • பெற்றோர்கள் ஏன் பிள்ளைகளைக் கோபமாகக் கண்டிக்கக் கூடாது?

கலாத்தியர் 6:7-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • எதைச் செய்கிறோமோ அதற்கேற்ற விளைவுகளைத்தான் சந்திப்போம் என்பதைப் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் சொல்லிக்கொடுப்பது ஏன் முக்கியம்?

“ ‘பொறுமையாக நடந்துகொள்ளுங்கள்; அன்பினால் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்’​—⁠உங்கள் பிள்ளைகளிடம்” என்ற வீடிHS-.25யோவில் வரும் ஒரு காட்சி. தன் மகள் சூசன் சொல்வதை மேக்ஸ் பொறுமையாகக் கவனித்துக் கேட்கிறார்.

‘பொறுமையாக நடந்துகொள்ளுங்கள்; அன்பினால் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்’—உங்கள் பிள்ளைகளிடம் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • இந்த வீடியோவிலிருந்து நீங்கள் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டீர்கள்?

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) lfb “ஆளும் குழு எழுதிய கடிதம்,” பகுதி 1—முன்னுரை, பாடம் 1

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 6; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்