உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w24 மார்ச் பக். 32
  • மீட்புவிலை கொடுக்கப்படுவதற்கு முன்பே மன்னிப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மீட்புவிலை கொடுக்கப்படுவதற்கு முன்பே மன்னிப்பு
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
w24 மார்ச் பக். 32

பைபிள் போதனை

மீட்புவிலை கொடுக்கப்படுவதற்கு முன்பே மன்னிப்பு

இயேசு மீட்புவிலையாக கொடுத்த தன்னுடைய இரத்தத்தின் மூலம் மட்டும்தான் நம் பாவங்கள் மன்னிக்கப்படும். (எபே. 1:7) ஆனாலும், கடவுள், ‘முற்காலத்தில் செய்யப்பட்ட பாவங்களைச் சகித்துக்கொண்டு மன்னித்தார்,’ அதாவது இயேசு மீட்புவிலையைக் கொடுப்பதற்கு முன்பே மன்னித்தார் என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 3:25) நீதியாக நடக்கும் யெகோவாவால், மீட்புவிலை கொடுக்கப்படுவதற்கு முன்பே எப்படி மன்னிக்க முடியும்?

யெகோவா தன்மேல் விசுவாசம் வைக்கிறவர்களை மீட்பதற்காக ஒரு ‘சந்ததியை’ அனுப்பப்போவதாக வாக்குக் கொடுத்திருந்தார். (ஆதி. 3:15; 22:18) அவரைப் பொறுத்தவரைக்கும், அந்த வாக்குறுதியைக் கொடுத்தபோதே மீட்புவிலை கொடுக்கப்பட்டதுபோல் இருந்தது. சரியான சமயத்தில் தன்னுடைய ஒரே மகன் மனப்பூர்வமாக மீட்புவிலையைக் கொடுப்பார் என்பதில் கடவுளுக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. (கலா. 4:4; எபி. 10:7-10) இயேசு பூமியில் இருந்தபோது, கடவுளுடைய பிரதிநிதியாக பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். மீட்புவிலையைக் கொடுப்பதற்கு முன்பே அவருக்கு அந்த அதிகாரம் இருந்தது. அதனால்தான், சீக்கிரத்தில் தான் கொடுக்கவிருந்த மீட்புவிலையின் அடிப்படையில், விசுவாசம் வைக்கிறவர்களுடைய பாவங்களை அவர் மன்னித்தார்.—மத். 9:2-6.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்