உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w24 நவம்பர் பக். 31
  • தவறாமல் படிக்க . . .

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தவறாமல் படிக்க . . .
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
w24 நவம்பர் பக். 31
ஒரு சகோதரி பைபிளை ஆராய்ச்சி செய்து படிப்பதற்காக லேப்டாப்பையும் பைபிளையும் ஒரு நோட்டையும் பயன்படுத்துகிறார். “புதிய உலக மொழிபெயர்ப்பில்” இணைப்பு B9-ல் இருக்கிற “தானியேல் முன்னறிவித்த உலக வல்லரசுகள்” என்ற வரைபடத்தைப் பயன்படுத்துகிறார்.

தவறாமல் படிக்க . . .

பைபிளைத் தவறாமல் படிப்பது, அதுவும் ரசித்துப் படிப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? நம் எல்லாருக்குமே அது சிலசமயங்களில் கஷ்டமாக இருக்கலாம். நாம் வழக்கமாக செய்யும் சில விஷயங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உதாரணமாக, குளிப்பதற்கு நேரமும் முயற்சியும் தேவை. குளித்தப் பிறகு புத்துணர்ச்சி கிடைக்கும். பைபிளைப் படிப்பதும் அப்படித்தான்! “கடவுளுடைய வார்த்தையாகிய தண்ணீரால்” சுத்தப்படுத்திக்கொள்ளும்போது நமக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். (எபே. 5:26) இதற்கு உதவும் சில டிப்ஸை இப்போது பார்க்கலாம்:

  • அட்டவணை போடுங்கள். கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டிய ‘மிக முக்கியமான காரியங்களில்’ பைபிள் படிப்பதும் ஒன்று. (பிலி. 1:10) நீங்கள் போடும் அட்டவணையைத் தவறாமல் கடைப்பிடிக்க, அதைக் கண்ணில்படும் இடத்தில் ஒட்டிவையுங்கள். ஒருவேளை, ஃபிரிட்ஜ் கதவில் ஒட்டிவைக்கலாம். படிப்பு நேரத்தை மறந்துவிடாமல் இருக்க ஃபோனில் ‘அலாரம்’ வைக்கலாம்.

  • தேவைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்ளுங்கள். கவனம் சிதறாமல் ரொம்ப நேரம் உங்களால் படிக்க முடியுமா? அல்லது, நேரத்தைப் பிரித்து கொஞ்சம் கொஞ்சமாகப் படிப்பது உங்களுக்குச் சுலபமாக இருக்குமா? உங்கள் சூழ்நிலை உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். அதனால், அதற்கேற்ற மாதிரி படியுங்கள். படிக்க வேண்டிய நேரம் வரும்போது, படிக்க விருப்பம் இல்லையென்றால் என்ன செய்வது? பத்து நிமிஷமாவது படிக்க முயற்சி செய்யலாம். படிக்காமலேயே இருப்பதற்குப் பதிலாக, கொஞ்ச நேரம் படித்தால்கூட ரொம்பப் பிரயோஜனமாக இருக்கும். அப்படிப் படிக்க ஆரம்பித்தால், தொடர்ந்து படிப்பதற்கு உங்களுக்கு ஆசை வரும்.—பிலி. 2:13.

  • எதைப் படிக்க வேண்டும் என்று முன்பே தேர்ந்தெடுங்கள். படிக்க உட்கார்ந்த பிறகு எதைப் படிக்க வேண்டும் என்று யோசித்தால், ‘நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்துகிறீர்கள்’ என்று சொல்ல முடியுமா? முடியாது! (எபே. 5:16) எந்தெந்த கட்டுரைகளைப் படிக்க வேண்டும், எந்தெந்த தலைப்புகளில் படிக்க வேண்டும் என்று முன்கூட்டியே ஒரு லிஸ்ட் போட்டு வைக்கலாம். மனதில் ஏதாவது கேள்வி வந்தால், அதை எழுதி வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு தடவை படித்து முடிக்கும்போதும் வேறு எதையாவது பற்றிப் படிக்க வேண்டும் என்று தோன்றினால் அதையும் அந்த லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  • அட்டவணையில் மாற்றங்கள் செய்துகொள்ளுங்கள். மாற்றங்கள் செய்வதற்கு வசதியாக இருக்கிறமாதிரி ஒரு அட்டவணை போடுங்கள். உதாரணத்துக்கு, எவ்வளவு நேரம் படிக்கப்போகிறீர்கள், எதைப் படிக்கப்போகிறீர்கள் என்பதிலெல்லாம் அவ்வப்போது மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். எதை, எப்போது, எவ்வளவு நேரம் படிக்கிறீர்கள் என்பது முக்கியம் இல்லை, தவறாமல் படிக்கிறீர்களா என்பதுதான் முக்கியம்.

தவறாமல் படிப்பது நமக்கு ரொம்பப் பிரயோஜனமாக இருக்கும். நாம் யெகோவாவிடம் நெருங்கிப் போவோம், ஞானமாக நடந்துகொள்வோம், நமக்குப் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.—யோசு. 1:8.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்