உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w24 டிசம்பர் பக். 30
  • வாசகர் கேட்கும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகர் கேட்கும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • இதே தகவல்
  • உண்மையுள்ள தேவதூதர்களைப் போல் நடந்துகொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
w24 டிசம்பர் பக். 30

வாசகர் கேட்கும் கேள்விகள்

1 தீமோத்தேயு 5:21-ல் சொல்லியிருக்கும் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட தேவதூதர்கள்’ யார்?

மூப்பராகச் சேவை செய்த தீமோத்தேயுவுக்கு பவுல் இப்படி எழுதினார்: “கடவுளுக்கும், கிறிஸ்து இயேசுவுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட தேவதூதர்களுக்கும் முன்னால் நான் உனக்கு ஆணையிட்டுச் சொல்கிறேன்: எந்தவித தப்பெண்ணமோ பாரபட்சமோ இல்லாமல் இந்த அறிவுரைகளைக் கடைப்பிடி.”—1 தீ. 5:21.

முதலில் இந்த ‘தேர்ந்தெடுக்கப்பட்ட தேவதூதர்கள்’ யாராக இருக்க முடியாது? இவர்கள் 1,44,000 பேராக இருக்க முடியாது. ஏனென்றால், பவுல் இந்தக் கடிதம் எழுதிய சமயத்தில் 1,44,000 பேரில் யாருமே பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படவில்லை. அப்போஸ்தலர்கள், மற்ற பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் என யாருமே அந்தச் சமயத்தில் பரலோகத்துக்குப் போகவோ பரலோகத்துக்குரிய உடலில் மாறவோ இல்லை. அதனால், கண்டிப்பாக ‘தேர்ந்தெடுக்கப்பட்ட தேவதூதர்கள்’ இவர்களாக இருக்க முடியாது.—1 கொ. 15:50-54; 1 தெ. 4:13-17; 1 யோ. 3:2.

அதோடு, அவர்கள் பெருவெள்ளத்துக்கு முன்பு கீழ்ப்படியாமல் போன தூதர்களாகவும் இருக்க முடியாது. ஏனென்றால், அந்தத் தூதர்கள் சாத்தானோடு சேர்ந்து பேய்களாக மாறிவிட்டார்கள்; இயேசுவுக்கு எதிரிகளாக மாறிவிட்டார்கள். (ஆதி. 6:2; லூக். 8:30, 31; 2 பே. 2:4) எதிர்காலத்தில் அவர்கள் 1,000 வருஷங்களுக்கு அதலபாதாளத்துக்குள் கட்டிப்போடப்படுவார்கள். பிறகு, பிசாசோடு சேர்த்து அழிக்கப்படுவார்கள்.—யூ. 6; வெளி. 20:1-3, 10.

அப்படியென்றால், ‘தேர்ந்தெடுக்கப்பட்ட தேவதூதர்கள்’ என்று பவுல் சொன்னவர்கள், கடவுளுக்கும் இயேசுவுக்கும் உண்மையாக இருந்து பரலோகத்தில் அவர்களோடு சேர்ந்து வேலை செய்கிற தேவதூதர்களாகத்தான் இருக்க வேண்டும்.

பரலோகத்தில் லட்சக்கணக்கான உண்மையுள்ள தேவதூதர்கள் இருக்கிறார்கள். (எபி. 12:22, 23) ஆனால் ஒரே நேரத்தில், எல்லா தேவதூதர்களுக்கும் யெகோவா ஒரே வேலையைக் கொடுப்பதில்லை. (வெளி. 14:17, 18) உதாரணத்துக்கு, ஒருசமயம் 1,85,000 அசீரிய படைவீரர்களை அழிக்கும் வேலையை யெகோவா ஒரு தேவதூதருக்குக் கொடுத்தார். (2 ரா. 19:35) ‘மற்றவர்களைப் பாவம் செய்ய வைக்கிற எல்லாரையும், அக்கிரமம் செய்கிற எல்லாரையும் அவருடைய அரசாங்கத்திலிருந்து பிரித்தெடுக்கும்’ வேலையை யெகோவா நிறைய தேவதூதர்களுக்குக் கொடுத்திருக்கலாம். (மத். 13:39-41) மற்ற சில தேவதூதர்களுக்கு, ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கூட்டிச்சேர்க்கும்’ வேலையைக் கொடுத்திருக்கலாம். (மத். 24:31) வேறுசில தேவதூதர்களிடம் ‘நம் வழிகளிலெல்லாம் நம்மை பாதுகாக்க’ சொல்லி யெகோவா கட்டளை கொடுத்திருக்கிறார்.—சங். 91:11; மத். 18:10; மத்தேயு 4:11-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்; லூக். 22:43.

ஊழியம் செய்யும் ஒரு தம்பதியை ஒரு வீட்டுக்கு ஒரு தேவதூதர் வழிநடத்துகிறார். அந்த வீட்டில் இருக்கும் நபர் ஜெபம் செய்துகொண்டிருக்கிறார்.

1 தீமோத்தேயு 5:21-ல் சொல்லியிருக்கிற ‘தேர்ந்தெடுக்கப்பட்ட தேவதூதர்கள்,’ அநேகமாக சபை வேலைகளைக் கவனித்துக்கொள்வதில் உதவுவதற்காக நியமிக்கப்பட்ட தேவதூதர்களைக் குறிக்க வேண்டும். ஏனென்றால், அந்த வசனத்துக்கு முன்பின் இருக்கிற வசனங்களைப் பார்த்தால், மூப்பர்களுக்கு பவுல் சில ஆலோசனைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். சபையில் இருக்கிறவர்களும் மூப்பர்களை மதித்து நடக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். மூப்பர்கள் “எந்தவித தப்பெண்ணமோ பாரபட்சமோ இல்லாமல்” நடந்துகொள்ள வேண்டும் என்றும், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு முடிவையும் எடுத்துவிடக் கூடாது என்றும் பவுல் சொன்னார். அவர் கொடுத்த ஆலோசனைக்கு அவர்கள் ஏன் கீழ்ப்படிய வேண்டும் என்றும் சொன்னார். அதாவது, “கடவுளுக்கும், கிறிஸ்து இயேசுவுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட தேவதூதர்களுக்கும் முன்னால்” அவர்கள் சேவை செய்துகொண்டு வருகிறார்கள் என்பதை ஞாபகப்படுத்தினார். இதிலிருந்து நமக்கு என்ன புரிகிறது? சில தேவதூதர்களை, சபை சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்வதற்காக யெகோவா விசேஷமாக நியமித்திருக்கிறார் என்று தெரிகிறது. அவர்கள் சபையைப் பாதுகாக்கிறார்கள்; பிரசங்க வேலையை முன்நின்று வழிநடத்துகிறார்கள்; கவனிக்கிற விஷயங்களை யெகோவாவிடம் திரும்பப் போய் சொல்கிறார்கள்.—மத். 18:10; வெளி. 14:6.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்