உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 ஜனவரி பக். 32
  • மறக்காமல் இருக்க வரையுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மறக்காமல் இருக்க வரையுங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • இதே தகவல்
  • “கடவுளிடம் நெருங்கிப் போவது” நமக்கு நல்லது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 ஜனவரி பக். 32

படிக்க டிப்ஸ்

மறக்காமல் இருக்க வரையுங்கள்

படிக்கிற விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்வது நிறைய பேருக்குக் கஷ்டமாக இருக்கிறது. ஆனால், ‘இயேசு சொன்ன உதாரணங்களைச் ­சுலபமாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடிகிறதே’ என்று நீங்கள் யோசிக்கலாம். அதற்குக் காரணம், அவற்றைப் படங்களாக மனதில் ஓடவிட முடிகிறது. அதனால்தான் அவை ஞாபகத்தில் நிற்கின்றன. அதேபோல், படிக்கிற விஷயங்களை நீங்களும் படங்களாக மனதில் ஓடவிட்டால் அவை ஞாபகத்தில் நிற்கும். அதனால், கற்றுக்கொள்ளும் விஷயங்களைப் படங்களாக வரையுங்கள்.

பொதுவாக, இப்படிச் செய்கிறவர்களால் புதிய விஷயங்களை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. படிக்கிற வார்த்தைகளை மட்டுமல்ல, முக்கிய கருத்துகளையும் அவர்களால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடிகிறது. அழகான ஓவியங்களை வரைய வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில்லை, சாதாரண எளிமையான படங்களைத்தான் வரைகிறார்கள். இந்த முறையில் படிப்பது வயதானவர்களுக்கும் உதவியாக இருக்கிறது என்று அனுபவம் காட்டுகிறது.

அடுத்த தடவை படிக்கும்போது, படிக்கும் விஷயங்களைப் படங்களாக வரைந்து பாருங்கள். அவற்றை நீங்கள் நிச்சயம் மறக்க மாட்டீர்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்