உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 பிப்ரவரி பக். 30-31
  • இப்படிக்கூட பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கலாமா?!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிக்கூட பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கலாமா?!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 பிப்ரவரி பக். 30-31
ஒரு பெண்மணிக்கு ஒரு சகோதரியும் அவருடைய கணவரும் வீடியோ கான்ஃப்ரன்ஸ் வழியாக பைபிள் படிப்பு நடத்துகிறார்கள்.

இப்படிக்கூட பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கலாமா?!

மேரியும் அவருடைய கணவர் ஜானும்a வாழ்ந்த இடத்தில், பிலிப்பைன்ஸிலிருந்து வந்து வேலை செய்த நிறைய பேர் இருந்தார்கள். அவர்களிடமெல்லாம் நல்ல செய்தியைச் சொல்லும் வாய்ப்பு அந்தத் தம்பதிக்குக் கிடைத்தது. கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் தங்களுடைய நாட்டில் இருந்தவர்களிடம் மட்டுமல்ல, வேறு நாட்டில் இருந்தவர்களுக்குக்கூட மேரி பைபிள் படிப்பை ஆரம்பித்தார். வாருங்கள், எப்படி என்று பார்க்கலாம்!

மேரி யாருக்கெல்லாம் பைபிள் படிப்பு நடத்துகிறாரோ அவர்களிடம், “உங்களுக்குத் தெரிந்த யாராவது பைபிளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்களா?” என்று கேட்பாராம். ‘ஆமாம்’ என்று சொன்னால், அவர்களை அறிமுகப்படுத்தி வைக்க சொல்லி கேட்பாராம். இது ஒரு சாதாரண கேள்வி மாதிரி தெரியலாம். ஆனால் இந்தக் கேள்வியால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஏனென்றால், பொதுவாகவே பைபிளின் மதிப்பைப் புரிந்துகொண்டவர்கள், தங்களுடைய குடும்பத்தில் இருக்கிறவர்களும், நண்பர்களும்கூட அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். சரி, இப்போது மேரிக்குக் கிடைத்த பலன்களைப் பற்றிப் பார்க்கலாம்.

மேரியிடம் பைபிள் படிப்பு படித்த ஜாஸ்மின், ஆர்வமுள்ள நான்கு பேரை மேரிக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களில் ஒருவர்தான் கிறிஸ்டென் என்ற பெண்மணி. அவருக்கு பைபிள் படிப்பு ரொம்பப் பிடித்திருந்ததால் வாரத்தில் இரண்டு தடவை படிப்பு நடத்தச் சொல்லி கேட்டார். கிறிஸ்டெனுக்குத் தெரிந்த யாருக்காவது பைபிளைப் படிக்க விருப்பம் இருக்குமா என்று மேரி கேட்டார். அதற்கு கிறிஸ்டென், “என் நண்பர்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்” என்றார். ஒருசில வாரங்களிலேயே நான்கு நண்பர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். பிறகு, இன்னும் சில நண்பர்களையும் அறிமுகப்படுத்தினார். இப்படியே ஒருவர் இன்னொருவரை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்ததால் மேரிக்கு நிறைய பைபிள் படிப்புகள் கிடைத்தன.

கிறிஸ்டெனின் குடும்பத்தில் இருந்த மற்றவர்கள் பிலிப்பைன்ஸில் இருந்தார்கள். அவர்களும் பைபிளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கிறிஸ்டென் ஆசைப்பட்டார். அதனால், தன் மகள் ஆண்ட்ரியாவிடம் பேசினார். ஆரம்பத்தில் ஆண்ட்ரியாவுக்கு சாட்சிகளைப் பற்றித் தப்பான எண்ணம் இருந்தது. அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்வதில்லை என்றும், பழைய ஏற்பாட்டை மட்டும் பிடித்துக்கொண்டு இருப்பார்கள் என்றும் நினைத்தார். ஆனால், முதல் படிப்பிலேயே அவர் யோசித்தது தவறு என்று புரிந்துகொண்டார். பைபிளிலிருந்து புதிதாக எதையாவது தெரிந்துகொண்டபோது, “பைபிளில் ஒரு விஷயம் இருக்கிறது என்றால் அது சரிதான்” என்பார் ஆண்ட்ரியா.

பிறகு ஆண்ட்ரியா, தன்னுடைய இரண்டு நண்பர்களையும், கூட வேலை செய்த ஒருவரையும் மேரிக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களும் படிக்க ஆரம்பித்தார்கள். அதுமட்டுமல்ல, ஆண்ட்ரியா பைபிள் படிப்பு படித்துக்கொண்டிருந்ததை அவருடைய அத்தை கேட்டுக்கொண்டு இருந்திருக்கிறார். அவருடைய பெயர் ஏஞ்செல்லா. அவருக்குக் கண் தெரியாது. ஒருநாள் அவர் தன்னை மேரியிடம் அறிமுகப்படுத்தி வைக்க சொல்லி ஆண்ட்ரியாவிடம் கேட்டார். தனக்கும் பைபிள் படிப்பை நடத்தும்படி கேட்டிருக்கிறார். படித்த விஷயங்கள் ஏஞ்செல்லாவுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஒரு மாதத்திலேயே நிறைய வசனங்களை மனப்பாடம் செய்துவிட்டார். வாரத்தில் நான்கு தடவை படித்தார். ஆண்ட்ரியாவின் உதவியோடு இன்டர்நெட் மூலமாகக் கூட்டங்களிலும் கலந்துகொண்டார்.

கிறிஸ்டென் பைபிள் படிப்பு படித்தபோது அவருடைய கணவர் ஜோஷ்வா, பின்னாடி அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்ததை மேரி கவனித்தார். அவரையும் பைபிள் படிப்புக்கு வரச் சொல்லி மேரி கூப்பிட்டார். அதற்கு ஜோஷ்வா, “நான் சும்மா வந்து உட்காருகிறேன். என்னிடம் கேள்வி கேட்கக் கூடாது. கேட்டால் எழுந்து போய்விடுவேன்” என்றார். ஆனால் படிக்க ஆரம்பித்த ஐந்து நிமிஷத்திலேயே கிறிஸ்டெனைவிட அவர்தான் நிறைய கேள்விகளைக் கேட்டார். அதற்குப் பிறகு அவரும் படிப்புக்கு ஒத்துக்கொண்டார்.

மேரி கேட்ட ஒரு சாதாரண கேள்வி நிறைய பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க உதவியது. அவர்களுக்கெல்லாம் படிப்பு நடத்த நிறைய சகோதர சகோதரிகளை மேரி ஏற்பாடு செய்தார். மொத்தமாக 28 படிப்புகளை மேரி ஆரம்பித்தார்; அதுவும், நான்கு நாடுகளில்!

நாம் ஆரம்பத்தில் பார்த்த ஜாஸ்மின், ஏப்ரல் 2021-ல் ஞானஸ்நானம் எடுத்தார். கிறிஸ்டென், மே 2022-ல் ஞானஸ்நானம் எடுத்தார். அவர் திரும்பவும் பிலிப்பைன்ஸுக்குப் போய் தன்னுடைய குடும்பத்தோடு வாழ்கிறார். கிறிஸ்டென் அறிமுகப்படுத்திய இன்னும் இரண்டு பேரும் ஞானஸ்நானம் எடுத்துவிட்டார்கள். கொஞ்ச மாதம் கழித்து ஏஞ்செல்லாவும் ஞானஸ்நானம் எடுத்தார்; இப்போது அவர் ஒழுங்கான பயனியராக சேவை செய்கிறார். கிறிஸ்டெனின் கணவர் ஜோஷ்வாவும் அவர்களுடைய மகள் ஆண்ட்ரியாவும் வேறுசில பைபிள் படிப்புகளும் நல்ல முன்னேற்றம் செய்துவருகிறார்கள்.

முந்தின படத்தில் இருக்கும் சகோதரி, தன்னோடு பைபிள் படிக்கும் பெண்ணிடமும் அவருடைய நான்கு நண்பர்களிடமும் வீடியோ கான்ஃப்ரன்ஸ் வழியாக பேசிக்கொண்டிருக்கிறார்.

முதல் நூற்றாண்டிலும் நல்ல செய்தியைக் கேள்விப்பட்டவர்கள் அதைப் பற்றித் தங்களுடைய குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் சொன்னார்கள். இப்படி நல்ல செய்தி வேகமாகப் பரவியது. (யோவா. 1:41, 42அ, அப். 10:24, 27, 48; 16:25-33) உங்களிடம் பைபிள் படிக்கிறவர்களிடமும் ஆர்வம் காட்டுகிற மற்றவர்களிடமும், “உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது பைபிளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசையா?” என்று நீங்களும் கேளுங்கள். சாதாரணமான இந்தக் கேள்வியைக் கேட்பதன் மூலம் உங்களாலும் நிறைய பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முடியும்!

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்