படிக்க டிப்ஸ்
இதயத்தைத் தயாராக்குங்கள்
பைபிளைப் படிக்கும்போது, யெகோவாவின் யோசனைகள் நம் இதயத்தைத் தொட வேண்டும் என்றும் அவை மாற்றங்கள் செய்ய நம்மைத் தூண்ட வேண்டும் என்றும் ஆசைப்படுகிறோம். ஆனால் அதற்கு நம் இதயத்தைத் தயாராக்க வேண்டும். எஸ்றா அதைத்தான் செய்தார். ‘யெகோவாவின் திருச்சட்டத்தைப் படிக்க . . . அவர் தன் இதயத்தைத் தயார்படுத்தினார்.’ (எஸ்றா 7:10) நாம் எப்படி நம் இதயத்தைத் தயார்படுத்தலாம்?
ஜெபம் செய்யுங்கள். ஒவ்வொரு தடவை படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பும் ஜெபம் செய்யுங்கள். படிக்கும் விஷயங்களைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கும் உதவ சொல்லி யெகோவாவிடம் கேளுங்கள்.—சங். 119:18, 34.
மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைப்பவர்களுக்குக் கடவுள் சத்தியத்தை வெளிப்படுத்துவதில்லை. (லூக். 10:21) மற்றவர்கள் முன்பு பெரிய ஆளாக காட்டிக்கொள்வதற்காக ஆராய்ச்சி செய்யாதீர்கள். நீங்கள் யோசிக்கும் விதம் கடவுளுடைய யோசனைகளோடு ஒத்துப்போகவில்லை என்றால் மனத்தாழ்மையாக மாற்றங்களைச் செய்யுங்கள்.
ராஜ்ய பாடல்களைக் கேளுங்கள். இதயத்தைத் தொடும் சக்தி இசைக்கு இருக்கிறது. யெகோவாவை வணங்க அது நம்மைத் தயார்படுத்தும். அதனால், படிப்பதற்கு முன்பு ராஜ்ய பாடல்களைக் கேளுங்கள்.