படிக்க டிப்ஸ்
வசனங்களை ஞாபகம் வைக்க...
உங்களுக்குப் பிடித்த ஒரு வசனம் அடிக்கடி மறந்துவிடுகிறதா? அது உங்களை ஆறுதல்படுத்தும் வசனமாக இருக்கலாம்; தப்பான எண்ணங்களைத் தூக்கி எறிய உதவும் ஒன்றாக அல்லது இன்னொருவருக்கு நீங்கள் காட்ட நினைக்கும் ஒன்றாக இருக்கலாம். (சங். 119:11, 111) வசனங்களை மறக்காமல் இருக்க இதோ சில டிப்ஸ்:
JW லைப்ரரி ஆப்பில் இருக்கும் ‘டேக்’ வசதியை (tag feature) பயன்படுத்துங்கள். “பிடித்த வசனங்கள்” என்ற தலைப்பில் ஒரு டேக்-ஐ (tag) உருவாக்குங்கள். ஞாபகம் வைக்க விரும்பும் வசனங்களை அதில் போட்டு வையுங்கள்.
கண்ணில் படும் இடத்தில் வையுங்கள். நீங்கள் ஞாபகம் வைக்க விரும்பும் வசனத்தை, துண்டுச் சீட்டில் எழுதி அடிக்கடி கண்ணில் படும் இடத்தில் வையுங்கள். சிலர், கண்ணாடியில் அல்லது ப்ரிட்ஜில் ஒட்டிவைக்கிறார்கள். மற்றவர்கள், அதை போட்டோ எடுத்து, போனில் அல்லது கம்ப்யூட்டரில் ‘வால்பேப்பராக’ வைத்துக்கொள்கிறார்கள்.
வசன அட்டைகளைச் செய்து, அதைப் பயன்படுத்துங்கள். ஒரு சின்ன அட்டையின் அல்லது பேப்பரின் ஒரு பக்கத்தில் வசனத்தையும், இன்னொரு பக்கத்தில் அது பைபிளில் எங்கே இருக்கிறது என்பதையும் எழுதுங்கள். பிறகு இப்படிச் செய்யுங்கள்: ஒரு பக்கத்தைப் படித்துவிட்டு, அடுத்த பக்கத்தில் இருப்பதைப் பார்க்காமல் மனதிலிருந்து சொல்ல முயற்சி செய்யுங்கள்.