உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 செப்டம்பர் பக். 31
  • வாசகர் கேட்கும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகர் கேட்கும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 செப்டம்பர் பக். 31

வாசகர் கேட்கும் கேள்விகள்

“இளம் பெண்ணோடு பழகுகிற ஆணின் வழி” ‘அறிவுக்கு எட்டாதது’ என்று நீதிமொழிகள் 30:18, 19-ஐ எழுதியவர் எந்த அர்த்தத்தில் சொன்னார்?

இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று நிறைய பேர் குழம்பிப்போயிருக்கிறார்கள், சில அறிஞர்களும்கூட குழம்பிப்போயிருக்கிறார்கள். புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் முழு வசனம் இப்படி இருக்கிறது: “என்னுடைய அறிவுக்கு எட்டாத [வே.வா., நான் பார்த்து அதிசயப்படுகிற] மூன்று விஷயங்கள் இருக்கின்றன. எனக்குப் புரியாத நான்கு விஷயங்கள் இருக்கின்றன. அவை: வானத்தில் பறக்கிற கழுகின் வழி, பாறையில் ஊர்ந்துபோகிற பாம்பின் வழி, கடலில் மிதந்துசெல்கிற கப்பலின் வழி, இளம் பெண்ணோடு பழகுகிற ஆணின் வழி.”—நீதி. 30:18, 19.

“இளம் பெண்ணோடு பழகுகிற ஆணின் வழி” என்ற வார்த்தைகள் தவறான ஒரு விஷயத்தைக் குறிப்பதாக நாம் முன்பு நினைத்தோம். ஏன்? இந்த அதிகாரத்தில் இருக்கிற மற்ற வசனங்களில், “போதும்!” என்று சொல்லி திருப்தியடையாத சில தவறான விஷயங்களைப் பற்றிச் சொல்லப்பட்டு இருக்கின்றன. (நீதி. 30:15, 16) வசனம் 20-ல்கூட ‘கணவனுக்குத் துரோகம் செய்கிற பெண்ணை’ பற்றிச் சொல்லப்படுகிறது; தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அவள் சொல்கிறாள். இதையெல்லாம் வைத்து, “இளம் பெண்ணோடு பழகுகிற ஆணின் வழி” என்று சொல்லப்பட்டிருப்பது தவறான விஷயத்தைச் செய்வதைக் குறிக்கிறது என்று புரிந்திருந்தோம். ஏனென்றால், வானத்தில் பறக்கிற கழுகு, பாறையில் ஊர்ந்துபோகிற பாம்பு, கடலில் மிதந்துபோகிற கப்பல் தடயமே இல்லாமல் செல்வதுபோல், இளம் ஆணும் எந்தத் தடயமும் இல்லாமல் சில விஷயங்களைச் செய்கிறான் என்று புரிந்திருந்தோம். அதாவது, அப்பாவியான ஒரு இளம் பெண்ணை மயக்கி, அவளைத் தந்திரமாக தன்னுடைய வலையில் விழவைத்து அவளோடு உறவுகொள்வதைக் குறிக்கலாம் என்று நினைத்திருந்தோம்.

ஆனால், இந்த வசனங்கள் நல்ல விஷயத்தைப் பற்றிச் சொல்கிறது என்று நம்ப காரணங்கள் இருக்கின்றன. தனக்கு ஆச்சரியமாக இருந்த சில விஷயங்களைப் பற்றித்தான் இந்த எழுத்தாளர் எழுதியிருக்கிறார்.

இந்த வசனங்கள் நல்ல விஷயத்தைப் பற்றிச் சொல்கிறது என்று எபிரெய கையெழுத்துப் பிரதிகள் காட்டுகின்றன. நீதிமொழிகள் 30:18-ல் இருக்கிற “என்னுடைய அறிவுக்கு எட்டாத” என்பதற்கான எபிரெய வார்த்தை, ‘ஒரு நபர் பார்த்து ஆச்சரியப்படுகிற, அசந்துபோகிற, நம்ப முடியாத ஒரு விஷயத்தைக் குறிக்கிறது’ என்று தியாலஜிகல் லெக்ஸிகன் ஆஃப் த ஓல்ட் டெஸ்டமன்ட் சொல்கிறது.

அமெரிக்காவில் இருக்கிற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் கிராஃபர்ட் ஹெச். டாய் என்பவர், பைபிளில் இருக்கும் இந்தப் பதிவு தவறான ஒரு விஷயத்தைக் குறிக்கவில்லை என்று சொன்னார். “[அந்தப் பதிவில்] வரும் விஷயங்கள் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது என்பதைத்தான் அது விவரிக்கிறது” என்று அவர் சொன்னார்.

நீதிமொழிகள் 30:18, 19-ல் இருக்கிற விஷயங்கள் உண்மையிலேயே ஆச்சரியமான, நம்முடைய அறிவுக்கு எட்டாத விஷயங்கள் என்ற முடிவுக்கு நாமும் வரலாம். அந்த பைபிள் எழுத்தாளரைப் போலவே, உயரமாக பறக்கிற கழுகை பார்க்கும்போதும்... கால் இல்லாத பாம்பு பாறைமேல் போவதைப் பார்க்கும்போதும்... கடல்மேல் மிதந்துபோகிற ஒரு பெரிய கப்பலைப் பார்க்கும்போதும்... நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதேபோல், ஒரு இளம் ஆணுக்கும் இளம் பெண்ணுக்கும் இடையில் காதல் மலர்வதும் அவர்கள் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வதும் ஆச்சரியமான ஒன்று!

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்