கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
நினைவுநாள் காலத்துக்காகக் குறிக்கோள் வையுங்கள்
ஒவ்வொரு வருஷமும், நினைவுநாள் நிகழ்ச்சியை அனுசரிக்க நாம் ஆசையாகக் காத்திருக்கிறோம். மீட்புவிலையைக் கொடுத்த யெகோவாவைப் புகழவும் அவருக்கு நன்றி சொல்லவும், நினைவுநாளுக்கு முன்பும் பின்பும் நமக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவற்றை நாம் நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறோம். (எபே 1:3, 7) உதாரணத்துக்கு, மற்றவர்களை நினைவுநாளுக்கு அழைப்பதற்காக நாம் கடினமாக உழைக்கிறோம். சிலர், மார்ச்-ஏப்ரல் மாதங்களில் 30 அல்லது 50 மணிநேரம் ஊழியம் செய்து துணைப் பயனியர் செய்ய நிறைய முயற்சி எடுக்கிறார்கள். இந்த நினைவுநாள் சமயத்தில் நீங்களும் அதிகமாக ஊழியம் செய்ய ஆசைப்படுகிறீர்களா? அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?
முன்னதாகவே நன்றாக பிளான் பண்ணும்போது நம்மால் நிறைய சாதிக்க முடியும். (நீதி 21:5) நினைவுநாள் சீக்கிரம் வந்துவிடும். அதனால் இதுதான் பிளான் பண்ணுவதற்கான நேரம். நினைவுநாள் வாரங்களில் ஊழியத்தை எப்படி இன்னும் அதிகமாகச் செய்யலாம் என்று யோசித்து அதை அடைய குறிக்கோள் வையுங்கள். நீங்கள் எடுக்கும் முயற்சியை ஆசீர்வதிக்க சொல்லி யெகோவாவிடம் கேளுங்கள்.—1யோ 5:14, 15.
நினைவுநாள் வாரங்களில் ஊழியத்தை இன்னும் அதிகமாகச் செய்ய நீங்கள் என்னவெல்லாம் யோசித்து வைத்திருக்கிறீர்கள்?