பைபிளில் இருக்கும் புதையல்கள்
ஒரு அப்பா தன் மகனுக்கு கொடுத்த ஆலோசனை
யெகோவாவோடு ஒரு நல்ல நட்பை வளர்த்துக்கொள் (1நா 28:9; w05 2/15 பக். 19 பாரா 9)
முழு இதயத்தோடு யெகோவாவுக்கு சேவை செய் (1நா 28:9; w12 4/15 பக். 16 பாரா 13)
எப்போதுமே யெகோவாவையே நம்பி இரு, பயப்படாதே! (1நா 28:20; w17.09 பக். 32 பாரா. 20-21)
வயதான தாவீது ராஜா சாலொமோனுக்கு இந்த ஆலோசனைகளைக் கொடுத்தார். ஆலயத்தைக் கட்டும் மிக முக்கியமான வேலையை சாலொமோன் ஆரம்பிப்பதற்கு முன்பு, இவற்றை சொன்னார். சாலொமோன் அப்போது ஒரு இளைஞராகவும் அனுபவமில்லாதவராகவும் இருந்தார். இந்த ஆலோசனைகள் இன்று நமக்கு ஏன் முக்கியம்? குறிப்பாக, இளைஞர்களுக்கு?