உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • இந்த வாரம்
ஜூலை 7-13
கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்—2025 | ஜூலை

ஜூலை 7-13

நீதிமொழிகள் 21

பாட்டு 98; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. சந்தோஷமான மணவாழ்வுக்கு உதவும் ஞானமான ஆலோசனைகள்

(10 நிமி.)

அவசரப்பட்டுக் கல்யாணம் செய்துகொள்ளாதீர்கள் (நீதி 21:5; w03 10/15 பக். 4 பாரா 5)

கருத்துவேறுபாடுகள் வரும்போது மனத்தாழ்மை காட்டுங்கள் (நீதி 21:2, 4; g 7/08 பக். 7 பாரா 2)

ஒருவரிடம் ஒருவர் பொறுமையாகவும் அன்பாகவும் நடந்துகொள்ளுங்கள் (நீதி 21:19; w06 9/15 பக். 28 பாரா 13)

தன் மனைவி மனம்விட்டுப் பேசுவதைக் கணவர் பொறுமையாகக் கவனித்துக் கேட்கிறார்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • நீதி 21:31—வெளிப்படுத்துதல் 6:2-ல் இருக்கும் தீர்க்கதரிசனத்தைப் புரிந்துகொள்ள இந்த வசனம் எப்படி உதவுகிறது? (w05 1/15 பக். 17 பாரா 9)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) நீதி 21:1-18 ((th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். (lmd பாடம் 3 குறிப்பு 3)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. நீங்கள் சந்தர்ப்ப சாட்சி கொடுத்த ஒருவரிடம் மறுபடியும் பேசுங்கள். (lmd பாடம் 7 குறிப்பு 3)

6. நம்பிக்கைகளை விளக்குவது

(5 நிமி.) நடிப்பு. ijwfq கட்டுரை 54—பொருள்: விவாகரத்தைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் என்ன நினைக்கிறார்கள்? (lmd பாடம் 4 குறிப்பு 3)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 132

7. உங்கள் மணத்துணைக்கு மரியாதை காட்டுங்கள்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

“மணவாழ்வு மணம்வீச: மரியாதை காட்டுங்கள்” என்ற வீடியோவில் வரும் ஒரு காட்சி. சோஃபாவில் உட்கார்ந்து எதையோ படித்துக்கொண்டிருக்கும் தன் கணவருக்கு ஒரு சகோதரி குடிப்பதற்கு ஏதோவொன்றைக் கொண்டுவந்து கொடுக்கிறார்.

நீங்கள் கல்யாணம் செய்துகொண்டபோது, துணையிடம் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்வதாக யெகோவாவுக்கு முன்பு நேர்ந்துகொண்டீர்கள். அதனால், துணையிடம் நீங்கள் நடந்துகொள்ளும் விதம் யெகோவாவோடு உங்களுக்கு இருக்கிற பந்தத்தைப் பாதிக்கும்.—நீதி 20:25; 1பே 3:7.

மணவாழ்வு மணம்வீச: மரியாதை காட்டுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • துணைக்கு மரியாதை காட்டுவது ஏன் முக்கியம்?

  • இன்னும் அதிகமாக மரியாதை காட்டுவதற்கு நாம் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம்?

  • என்னென்ன பைபிள் ஆலோசனைகள் நமக்கு உதவும்?

  • துணைக்கு என்னென்ன வழிகளில் நாம் மரியாதை காட்டலாம்?

  • துணையிடம் எந்த விஷயங்களை நாம் பார்க்க வேண்டும், ஏன்?

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 28 பாரா. 16-22

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 72; ஜெபம்

பொருளடக்கம்
காவற்கோபுரம் (படிப்பு)—2025 | ஏப்ரல்

படிப்புக் கட்டுரை 18: ஜூலை 7-13, 2025

26 இளம் சகோதரர்களே—மாற்குவையும் தீமோத்தேயுவையும் போல நடந்துகொள்ளுங்கள்

கூடுதலாக படிக்க

மற்ற கட்டுரைகள்

தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • Tamil (Spoken)
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்