ஆகஸ்ட் 18-24
நீதிமொழிகள் 27
பாட்டு 102; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. உதவிக்கரம் நீட்டும் உண்மை நண்பர்கள்
(10 நிமி.)
உண்மை நண்பர்கள் நமக்குத் தேவையான ஆலோசனையையும் புத்திமதியையும் தைரியமாகக் கொடுப்பார்கள் (நீதி 27:5, 6; w19.09 பக். 5 பாரா 12)
சிலசமயம் சொந்தக்காரர்களைவிட உண்மை நண்பர்கள் நமக்கு உடனடியாக உதவி செய்யலாம் (நீதி 27:10; it-2 பக். 491 பாரா 3)
உண்மை நண்பர்கள் நம்மை செதுக்கி சீராக்குவார்கள் (நீதி 27:17; w23.09 பக். 10 பாரா 7)
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
நீதி 27:21—புகழ்ச்சி எப்படி நம்மை சோதிக்கும்? (w06 9/15 பக். 19 பாரா 12)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) நீதி 27:1-17 (th படிப்பு 5)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். கிறிஸ்தவராக இல்லாத ஒருவரை சந்திக்கிறீர்கள். (lmd பாடம் 6 குறிப்பு 5)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. நீங்கள் சந்தர்ப்ப சாட்சி கொடுத்த ஒருவரிடம் மறுபடியும் பேசுங்கள். கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கும் ஒரு வீடியோவைப் பற்றிக் கலந்துபேசுங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 3)
6. பேச்சு
(5 நிமி.) ijwyp கட்டுரை 75—பொருள்: என் ஃப்ரெண்டு என்னை நோகடித்தால் என்ன செய்வது? (th படிப்பு 14)
பாட்டு 109
7. ‘கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரன்’
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் அமைப்பில் நம்மால் நல்ல நல்ல நண்பர்களைக் கண்டுபிடிக்க முடியும். சபையில் இருக்கும் நிறைய பேரோடு நாம் நட்பாகப் பழகலாம், ஆனால் எத்தனை பேர் நம்முடைய நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள்? நெருக்கமான நண்பர்களாக இருப்பதற்கு ஒருவரை ஒருவர் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும், ஒருவரை ஒருவர் நம்ப வேண்டும், ஒருவரோடு ஒருவர் மனம்விட்டுப் பேச வேண்டும், சில விஷயங்களை ஒன்றாகச் சேர்ந்து செய்ய வேண்டும், ஒருவருக்கு ஒருவர் உதவ தயாராக இருக்க வேண்டும். அதனால், நெருக்கமான நட்பை வளர்க்கவும் கட்டிக்காக்கவும் நிறைய நேரமும் முயற்சியும் தேவை.
நீதிமொழிகள் 17:17-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்கு முன்பே, அதாவது இப்போதே, சகோதர சகோதரிகளோடு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்வது ஏன் நல்லது?
2 கொரிந்தியர் 6:12, 13-ஐ வாசியுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
மற்றவர்களோடு நட்பை வளர்த்துக்கொள்ள இந்த வசனங்கள் நமக்கு எப்படி உதவும்?
“எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது”—நண்பர்களை சம்பாதிக்க நேரம் எடுக்கும் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
நட்பைப் பற்றி இந்த வீடியோவிலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?
நட்பு என்ற விதையை விதைக்க முதலில் நீங்கள் ஒருவரைப் பார்த்துப் பாசமாக சிரிக்கலாம் அல்லது அன்பாக ஒரு வாழ்த்து சொல்லலாம். தண்ணீர் ஊற்ற ஊற்ற விதை வளருவதுபோல் அக்கறை காட்ட காட்ட நட்பு வளரும். ஆனால், அதற்கு நேரம் எடுக்கும் என்பதால் பொறுமையாக இருங்கள். அப்படிச் செய்தால், காலத்துக்கும் நிலைத்திருக்கும் நட்பு மலரும்.
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடங்கள் 10-11