உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 நவம்பர் பக். 15
  • நம் ஜெபங்களை யெகோவா பொக்கிஷமாகப் பார்க்கிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம் ஜெபங்களை யெகோவா பொக்கிஷமாகப் பார்க்கிறார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • யெகோவா நம் ஜெபங்களுக்கு எப்படிப் பதில் தருகிறார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 நவம்பர் பக். 15
படங்களின் தொகுப்பு: உலகம் முழுவதும் உள்ள சகோதர சகோதரிகள் ஜெபம் செய்கிறார்கள். 1. தூங்கப்போவதற்கு முன்பு ஒரு சின்னப் பெண் தன் அம்மாவோடு. 2. ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் தன் மனைவியோடு ஒரு கணவர். 3. மலைமேல் ஏறும் ஒரு சகோதரர். 4. கவலையில் இருக்கும் ஒரு சகோதரி. 5. படிப்பதற்குமுன் ஒரு சகோதரி. 6. ஏழை நாட்டில் இருக்கும் ஒரு சகோதரர். 7. சாப்பிடுவதற்குமுன் பெற்றோர் தங்கள் சின்னப் பெண்ணோடு.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

நம் ஜெபங்களை யெகோவா பொக்கிஷமாகப் பார்க்கிறார்

யெகோவா ஏற்றுக்கொள்ளும் ஜெபங்கள் அவருடைய ஆலயத்தில் அவர் முன்னால் தினமும் செலுத்தப்பட்ட வாசனையான தூபப்பொருள்போல் இருக்கின்றன. (சங் 141:2) யெகோவாவுக்கு நாம் நன்றி சொல்லும்போதும்... நம் அன்பைத் தெரிவிக்கும்போதும்... நம் கவலைகளை அவரிடம் கொட்டும்போதும்... நம் ஆசைகளைச் சொல்லும்போதும்... அவருடைய வழிநடத்துதலைக் கேட்கும்போதும்... அவருடன் இருக்கும் நட்பை எந்தளவு மதிக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். கூட்டங்களில் எல்லார் முன்பும் செய்யப்படும் சுருக்கமான ஜெபங்களை நம் வணக்கத்தின் ஒரு முக்கியமான பாகமாக யெகோவா பார்க்கிறார் என்பது உண்மைதான். அதேசமயத்தில், நம்முடைய தனிப்பட்ட ஜெபங்களில் நாம் மனம்திறந்து அவரிடம் பேசும்போது, அதுவும் நிறைய நேரம் பேசும்போது, அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார்!—நீதி 15:8.

ஜெபத்துக்கு நான் அடிமை என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • சகோதரர் ஜான்சனுக்கு என்னென்ன விசேஷ பொறுப்புகள் கிடைத்தன?

  • சகோதரர் ஜான்சனுக்கு ஜெபம்தான் எல்லாமே என்று எப்படிச் சொல்ல முடியும்?

  • சகோதரர் ஜான்சனுடைய அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டீர்கள்?

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்