உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 செப்டம்பர் பக். 15
  • பெற்றோர்களே, கடவுள் தருகிற ஞானத்தை பெற உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பெற்றோர்களே, கடவுள் தருகிற ஞானத்தை பெற உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • பிள்ளைகளுக்கு உதவ பைபிள் நியமங்களைப் பயன்படுத்துங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்பியிருப்பதை காட்டுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • ஆர்வமுள்ளவர்களுக்கு உதவுங்கள்—தாமதிக்காமல்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • தினமும் பைபிளைப் படியுங்கள், ஞானத்தைக் கண்டுபிடியுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 செப்டம்பர் பக். 15
கூட்டத்தில் நன்றாக கவனிக்கவும் அதில் பதில் சொல்லவும் ஒரு சகோதரி தன்னுடைய பிள்ளைகளுக்கு உதவுகிறார்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பெற்றோர்களே, கடவுள் தருகிற ஞானத்தை பெற உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்

கடவுள் தரும் ஞானத்தை பிள்ளைகள் பெறுவதற்கு ஒரு சிறந்த வழி, கிறிஸ்தவ கூட்டங்கள். கூட்டங்களில் பிள்ளைகள் பார்க்கிற, கேட்கிற விஷயங்கள்... சொல்கிற பதில்கள்... யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ளவும் அவருடன் நட்பை வளர்த்துக்கொள்ளவும் அவர்களுக்கு உதவும். (உபா 31:12, 13) நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், உங்கள் பிள்ளை கூட்டங்களிலிருந்து முழுமையாக நன்மையடைய எப்படி உதவலாம்?

  • கூட்டங்களில் நேரில் கலந்துகொள்ள முடிந்தளவுக்கு முயற்சி செய்யுங்கள்.—சங் 22:22.

  • கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் சகோதர சகோதரிகளுடன் பேசிப்பழக நேரம் செலவு செய்யுங்கள்.—எபி 10:25.

  • உங்கள் குடும்பத்தில் இருக்கிற எல்லாரிடமும் கூட்டங்களில் படிக்கிற பிரசுரங்கள் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். அது அச்சடிக்கப்பட்டோ அல்லது எலெக்ட்ரானக் வடிவிலோ இருக்கலாம்

  • தாங்களாகவே பதிலை தயாரித்து சொந்த வார்த்தையில் சொல்வதற்கு பிள்ளைகளுக்கு உதவுங்கள்.—மத் 21:15, 16.

  • கூட்டங்களைப் பற்றியும் அதில் சொல்லப்படுகிற ஆலோசனைகளைப் பற்றியும் பிள்ளைகளிடம் நல்ல விதமாக பேசுங்கள்

  • ராஜ்ய மன்றத்தை சுத்தம் செய்வதற்கும் சபையில் இருக்கிற வயதான சகோதர சகோதரிகளிடம் பேசுவதற்கும் பிள்ளைகளை பழக்குங்கள்

யெகோவாவோடு நட்பை வளர்த்துக்கொள்ள பிள்ளைகளுக்கு உதவுவதற்கு நிறைய நேரமும் முயற்சியும் தேவை. ஆனால், நீங்கள் சோர்ந்துபோக தேவையில்லை. உங்களுக்கு உதவ யெகோவா எப்போதும் தயாராக இருக்கிறார்.—ஏசா 40:29.

பெற்றோர்களே, யெகோவாவை நம்புங்கள் அவர் உங்களுக்கு பலம் கொடுப்பார் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • ஜாக்கும் லீயாவும் சோர்ந்துபோய் இருந்ததால் என்ன ஆனது?

  • பெற்றோர்கள் ஏன் பலத்துக்காக யெகோவாவிடம் உதவி கேட்க வேண்டும்?

  • அந்த சூழ்நிலையை சமாளிக்க ஜாக்கும் லீயாவும் எந்தெந்த வழிகளில் யெகோவாவையே நம்பியிருந்தார்கள்?

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்