கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பெற்றோர்களே, கடவுளுடைய மனதை சந்தோஷப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்
நம்முடைய பிள்ளைகள் யெகோவாவுக்குப் பொக்கிஷங்களாக இருக்கிறார்கள். அவர்மேல் வைத்திருக்கிற விசுவாசத்தையும் அன்பையும் அதிகரிக்க பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், எப்படிச் சகிப்புத்தன்மை காட்டுகிறார்கள் என்பதையெல்லாம் யெகோவா பார்க்கிறார். (1 சா. 2:26; லூக். 2:52) அவர்கள் ரொம்ப சின்னப் பிள்ளைகளாக இருந்தாலும்கூட நல்ல பிள்ளைகளாக நடந்தால் யெகோவாவுடைய மனதை சந்தோஷப்படுத்த முடியும். (நீதி. 27:11) யெகோவா அவருடைய அமைப்பின் மூலமாக அருமையான கருவிகளைக் கொடுத்திருக்கிறார். இவற்றை வைத்து யெகோவாமேல் அன்பு காட்டவும் அவருக்குக் கீழ்ப்படியவும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க முடியும்.
பிள்ளைகளே—உங்கள் சகிப்புத்தன்மை யெகோவாவை சந்தோஷப்படுத்துகிறது! என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
இத்தனை வருஷங்களாக யெகோவா எப்படிப் பிள்ளைகளுக்கு உதவியும் ஆலோசனையும் கொடுத்திருக்கிறார்?
பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க இப்போது பெற்றோர்களுக்கு என்ன கருவிகள் இருக்கின்றன?
பிள்ளைகளே, யெகோவா தந்திருக்கும் எந்தக் கருவி உங்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது, ஏன்?