ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
இப்படிப் பேசலாம்
நினைவுநாள் அழைப்பிதழ் விநியோகிப்பு (மார்ச் 11–ஏப்ரல் 4)
“ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்கு உங்களை அழைப்பதற்காக வந்திருக்கிறோம். உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள். இயேசுவின் நினைவுநாள் நிகழ்ச்சிதான் அது.” அழைப்பிதழை அவரிடம் கொடுங்கள் [அல்லது மெசேஜாகவோ ஈமெயிலாகவோ அனுப்புங்கள்]. பிறகு, “நம்முடைய பகுதியில் இந்த நிகழ்ச்சி நடக்கிற நேரமும் இடமும் இதில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு விசேஷப் பேச்சு கொடுக்கப்படும். அதில் கலந்துகொள்ளவும் உங்களை அழைக்கிறோம்” என்று சொல்லுங்கள்.
ஆர்வம் காட்டினால்: இயேசுவின் மரணத்தை நினைத்துப் பாருங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள் [அல்லது மெசேஜாகவோ ஈமெயிலாகவோ அனுப்புங்கள்].
மறுசந்திப்புக்கான கேள்வி: இயேசு ஏன் இறந்தார்?
முதல் சந்திப்பு (மார்ச் 1-10, ஏப்ரல் 5-30)
கேள்வி: ஒரு பேரழிவு நடந்தபோது அல்லது ஒரு அவசரநிலை ஏற்பட்டபோது தங்களுடைய உயிரைக்கூட பொருட்படுத்தாமல், மற்றவர்களுக்கு உதவிய சில ஆட்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படிப்பட்டவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
வசனம்: யோவா 15:13
மறுசந்திப்புக்கான கேள்வி: பொதுவாக யாருமே செய்ய முன்வராத ஒரு உதவியை, உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ ஒருவர் செய்திருக்கிறாரா?
மறுசந்திப்பு
கேள்வி: பொதுவாக யாருமே செய்ய முன்வராத ஒரு உதவியை, உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ ஒருவர் செய்திருக்கிறாரா?
வசனம்: மத் 20:28
மறுசந்திப்புக்கான கேள்வி: நமக்காக உயிரையே கொடுத்த ஒருவரை நினைத்துப் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அது எங்கே நடக்கிறது என்று சொல்லட்டுமா?