‘காவற்கோபுரத்தில்’ வரும் கூடுதல் கட்டுரைகள்
நிறைய பிரஸ்தாபிகள் கூட்டங்களுக்குத் தயாரிப்பதற்காக JW லைப்ரரியைப் பயன்படுத்துகிறார்கள். கூட்டங்கள் பட்டனை க்ளிக் செய்தாலே, அந்த வார படிப்புக் கட்டுரையை அவர்களால் சுலபமாகப் பார்க்க முடியும். காவற்கோபுர படிப்பு இதழ்களில், படிப்புக் கட்டுரைகளைத் தவிர முக்கியமான மற்ற கட்டுரைகளும் சிலசமயம் வருகின்றன. இந்தக் கட்டுரைகளை நீங்கள் எப்படி JW லைப்ரரியில் கண்டுபிடித்து அதிலிருந்து பயன் அடையலாம்?
ஒவ்வொரு காவற்கோபுர படிப்புக் கட்டுரையின் முடிவிலும், “மேலும் படிக்க” என்ற உப தலைப்பு இருக்கும். அதற்குக் கீழே, “இந்த இதழின் மற்ற கட்டுரைகள்” என்ற லின்க் இருக்கும். அதை க்ளிக் செய்து, பொருளடக்கத்தைப் பாருங்கள். அங்கே படிப்புக் கட்டுரைகளும் அவற்றின் எண்களும் பார்த்தவுடனேயே தெரியும் விதத்தில் இருக்கும். அதனால், கூடுதல் கட்டுரைகளை உங்களால் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும். அவற்றை க்ளிக் செய்து நீங்கள் படிக்கலாம்.
JW லைப்ரரியின் முதல் பக்கத்தில் “புது வரவு” என்ற பகுதி இருக்கும். அதில் புதிதாக வரும் ஒவ்வொரு காவற்கோபுர இதழையும் டவுன்லோட் செய்யுங்கள். அதன் பொருளடக்கத்தை எடுத்துப் பாருங்கள். அதில் இருக்கும் எல்லா கட்டுரைகளையும் படித்துப் பயன் அடையுங்கள்.