படிக்க டிப்ஸ்
படங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
நம்முடைய பிரசுரங்களில் எக்கச்சக்கமான படங்கள் இருக்கின்றன. அவை நமக்கு முக்கியமான பாடங்களைக் கற்றுத்தருகின்றன. அவற்றிலிருந்து முழுமையாக நன்மையடைய நீங்கள் என்ன செய்யலாம்?
படிப்பதற்கு முன்பு கட்டுரையில் இருக்கும் படங்களைப் பாருங்கள். சுவையான ஒரு உணவைக் கண்களால் பார்க்கும்போதே நமக்குள் பசி அதிகமாகும். அதேபோல், படங்களைப் பார்ப்பது நம்முடைய ஆர்வத்தைத் தூண்டும்; படிக்கும் ஆசையை அதிகமாக்கும். ஒரு கட்டுரையைப் படிப்பதற்குமுன், ‘நான் என்ன பார்க்கிறேன்?’ என்று கேட்டுக்கொள்ளுங்கள்.—ஆமோ. 7:7, 8.
கட்டுரையைப் படிக்கும்போது, படங்கள் எதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று யோசியுங்கள். படக்குறிப்பு அல்லது படவிளக்கம் இருந்தால் அதைப் படித்துப் பாருங்கள். கட்டுரையோடு அந்தப் படம் எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்றும் அது உங்கள் வாழ்க்கைக்கு எப்படி உதவும் என்றும் யோசியுங்கள்.
கட்டுரையைப் படித்த பிறகு, முக்கிய குறிப்புகளை மறுபார்வை செய்ய படங்களைப் பயன்படுத்துங்கள். கண்களை மூடி, படங்களையும் அதிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட குறிப்புகளையும் மனதில் ஓடவிடுங்கள்.
இந்த இதழில் இருக்கும் படங்களைப் பார்த்து, கற்றுக்கொண்ட குறிப்புகளை ஞாபகத்துக்குக் கொண்டுவர முடிகிறதா என்று பாருங்கள்.