12 சிமியோனின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: நேமுவேல், இவருடைய வம்சத்தார் நேமுவேலர்கள்; யாமின், இவருடைய வம்சத்தார் யாமினியர்கள்; யாகீன், இவருடைய வம்சத்தார் யாகீனியர்கள்; 13 சேராகு, இவருடைய வம்சத்தார் சேராகியர்கள்; சாவூல், இவருடைய வம்சத்தார் சாவூலியர்கள்.