உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
நல்வரவு.
யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகங்களில் ஆராய்ச்சி செய்ய பல மொழிகளில் இதை தயாரித்திருக்கிறார்கள்.
jw.org-ல் புத்தகங்களை டவுன்லோடு செய்யலாம்.
அறிவிப்பு
புதிய மொழியில் கிடைக்கும்: Dendi
  • இன்று

சனி, ஆகஸ்ட் 9

யாராவது என்னைப் பின்பற்றிவர விரும்பினால், அவர் தன்னையே துறந்து, தன் சித்திரவதைக் கம்பத்தை தினமும் சுமந்துகொண்டு, தொடர்ந்து என் பின்னால் வர வேண்டும்.—லூக். 9:23.

ஒருவேளை, குடும்பத்தில் இருந்து உங்களுக்கு எதிர்ப்பு வந்திருக்கலாம்; கடவுளுடைய அரசாங்கத்துக்காக பணம் பொருளைத் தியாகம் செய்திருக்கலாம். (மத். 6:33) நீங்கள் செய்த எதையுமே யெகோவா மறக்க மாட்டார். (எபி. 6:10) இயேசுவும் இப்படி சொன்னார்: “எனக்காகவும் நல்ல செய்திக்காகவும் வீட்டையோ சகோதரர்களையோ சகோதரிகளையோ அம்மாவையோ அப்பாவையோ பிள்ளைகளையோ வயல்களையோ தியாகம் செய்கிறவன், இந்தக் காலத்தில் துன்புறுத்தல்களோடுகூட, 100 மடங்கு அதிகமாக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் அம்மாக்களையும் பிள்ளைகளையும் வயல்களையும் பெறுவான்; வரப்போகும் காலத்தில் முடிவில்லாத வாழ்வையும் நிச்சயம் பெறுவான்.” (மாற். 10:29, 30) நாம் செய்கிற தியாகங்களைவிட நமக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்தான் அதிகம்! இது எவ்வளவு உண்மை!—சங். 37:4. w24.03 9 ¶5

சிந்திக்க தினம் ஒரு வசனம்—2025

ஞாயிறு, ஆகஸ்ட் 10

உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.—நீதி. 17:17.

யூதேயாவில் ஒரு பெரிய பஞ்சம் வந்தபோது, அந்தியோகியாவில் இருக்கிற சகோதர சகோதரிகள் “ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை யூதேயாவில் இருந்த சகோதரர்களுக்குச் செய்ய வேண்டுமென்று தீர்மானித்தார்கள்.” (அப். 11:27-30) பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகள் ரொம்ப தூரத்தில் இருந்தாலும், அந்தியோகியாவில் இருந்த கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். (1 யோ. 3:17, 18) பேரழிவினால் சகோதர சகோதரிகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவரும்போது, இன்று நம்மாலும் கரிசனை காட்ட முடியும். அவர்களுக்கு உதவி செய்ய நாம் தயாராக இருக்கலாம். ஒருவேளை, நிவாரண வேலையில் கலந்துகொண்டு உதவி செய்யலாமா என்று மூப்பர்களிடம் கேட்கலாம், உலகளாவிய வேலைக்காக நன்கொடை கொடுக்கலாம், பேரழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஜெபம் செய்யலாம். உயிர் வாழ தேவையான அடிப்படை விஷயங்கள் கிடைப்பதற்கு சகோதர சகோதரிகளுக்கு உதவி தேவைப்படும். நம் ராஜாவான இயேசு இந்த உலகத்தை நியாயந்தீர்க்க வரும் சமயத்தில் அவருடைய பார்வையில் நாம் கரிசனை உள்ளவர்களாகத் தெரிந்தால், ‘வாருங்கள் . . . அரசாங்கத்தை சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்’ என்று இயேசு நம்மிடம் சொல்வார்.—மத். 25:34-40. w23.07 4 ¶9-10; 6 ¶12

சிந்திக்க தினம் ஒரு வசனம்—2025

திங்கள், ஆகஸ்ட் 11

நீங்கள் நியாயமானவர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கட்டும்.—பிலி. 4:5.

“வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் மக்களிடம்” பிரசங்கிப்பதற்காகத்தான் இயேசு பூமிக்கு அனுப்பப்பட்டார். ஆனாலும், வளைந்துகொடுக்கிறவராக நடந்துகொண்டார். ‘பேய் பிடித்திருக்கிற’ தன்னுடைய மகளைக் குணப்படுத்தச் சொல்லி ஒரு பெண், இயேசுவிடம் கெஞ்சிக் கேட்டாள். அந்தப் பெண் ஒரு இஸ்ரவேலராக இல்லாவிட்டாலும்கூட, இயேசு அவள்மேல் கரிசனை காட்டினார், அவளுடைய மகளைக் குணப்படுத்தினார். (மத். 15:21-28) இன்னொரு உதாரணத்தைப் பாருங்கள். “என்னை ஒதுக்கித்தள்ளுகிறவனை . . . நானும் ஒதுக்கித்தள்ளுவேன்” என்று இயேசு ஒருசமயம் சொல்லியிருந்தார். (மத். 10:33) ஆனால், மூன்று தடவை தன்னை தெரியாது என்று சொன்ன பேதுருவை இயேசு ஒதுக்கித்தள்ளினாரா? இல்லை. பேதுரு மனம் திருந்தியதையும், அவர் வைத்திருந்த விசுவாசத்தையும் இயேசு நினைத்துப் பார்த்தார். உயிர்த்தெழுந்த பிறகு, பேதுருவை இயேசு சந்தித்தார். தான் அவரை மன்னித்ததையும் அவர் மேல் அன்பு வைத்திருந்ததையும் கண்டிப்பாக பேதுருவிடம் இயேசு சொல்லியிருப்பார். (லூக். 24:33, 34) யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் வளைந்துகொடுக்கிறவர்கள். நாமும் நியாயமானவர்களாக, அதாவது வளைந்துகொடுக்கிறவர்களாக, இருக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். w23.07 21 ¶6-7

சிந்திக்க தினம் ஒரு வசனம்—2025
நல்வரவு.
யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகங்களில் ஆராய்ச்சி செய்ய பல மொழிகளில் இதை தயாரித்திருக்கிறார்கள்.
jw.org-ல் புத்தகங்களை டவுன்லோடு செய்யலாம்.
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்