30 ஆனால், அதற்குப்பின் ஏழு வருஷங்களுக்குப் பஞ்சம் வரும். அப்போது, எகிப்து தேசத்தில் அமோக விளைச்சல் கிடைத்த காலத்தையே ஜனங்கள் மறந்துபோவார்கள். அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும்.+ 31 முன்பிருந்த அமோக விளைச்சல் ஜனங்களுடைய ஞாபகத்துக்கு வராது. அந்தளவுக்குப் பஞ்சம் மிகக் கடுமையாக இருக்கும்.