3 இந்தத் தேசத்தில் அன்னியனாகத் தங்கியிரு.+ நான் எப்போதும் உன்னோடு இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன். உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசம் முழுவதையும் கொடுப்பேன்.+ உன் அப்பாவான ஆபிரகாமுக்குக் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுவேன்.+
8 யெகோவா உனக்கு முன்னால் போகிறார், அவர் உன்னோடு இருப்பார்.+ அவர் உன்னைவிட்டு விலக மாட்டார், உன்னைக் கைவிடவும் மாட்டார். அதனால் பயப்படாதே, திகிலடையாதே”+ என்று சொன்னார்.