19 யோசேப்பின் எலும்புகளையும் மோசே எடுத்துக்கொண்டு போனார். ஏனென்றால் யோசேப்பு இஸ்ரவேல் வம்சத்தாரிடம், “கடவுள் கண்டிப்பாக உங்களுக்குக் கருணை காட்டுவார். அதனால், நீங்கள் இங்கிருந்து போகும்போது என் எலும்புகளைக் கொண்டுபோக வேண்டும்” என்று சொல்லி உறுதிமொழி வாங்கியிருந்தார்.+
22 விசுவாசத்தால்தான் யோசேப்பு, சாகும் நிலையில் இருந்தபோது, இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்தைவிட்டு வெளியே போவார்கள் என்று சொன்னார். அதோடு, தன்னுடைய எலும்புகளை என்ன செய்ய வேண்டும் என்பது சம்பந்தமான* அறிவுரைகளையும்* கொடுத்தார்.+