6 அவர் கேனியர்களிடம்,+ “இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது அவர்களுக்கு நீங்கள் பெரிய உதவி செய்தீர்கள்.+ அதனால், அமலேக்கியர்களோடு சேர்த்து உங்களையும் அழிக்க நான் விரும்பவில்லை.+ தயவுசெய்து அவர்களைவிட்டு விலகிப் போங்கள்” என்று சொன்னார். அதனால், கேனியர்கள் அமலேக்கியர்களைவிட்டு விலகிப் போனார்கள்.