உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 3:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால்+ மண்ணுக்குப் போகும்வரை நெற்றி வியர்வை சிந்திதான் உணவு சாப்பிடுவாய். நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்”+ என்றார்.

  • சங்கீதம் 146:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 அவர்களுடைய உயிர்சக்தி* போய்விடுகிறது, அவர்கள் மண்ணுக்குத் திரும்புகிறார்கள்.+

      அதே நாளில் அவர்களுடைய யோசனைகள் அழிந்துபோகின்றன.+

  • பிரசங்கி 9:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 உயிரோடு இருக்கிறவர்களுக்குத் தாங்கள் என்றாவது ஒருநாள் சாக வேண்டியிருக்கும் என்பது தெரியும்.+ ஆனால், இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது,+ அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. ஏனென்றால், அவர்களைப் பற்றிய நினைவே யாருக்கும் இல்லை.+

  • பிரசங்கி 9:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 உன் கைகளால் எதைச் செய்தாலும் அதை முழு பலத்தோடு செய். ஏனென்றால், நீ போய்ச்சேரும் கல்லறையில்* வேலை செய்யவோ திட்டம் போடவோ முடியாது; அங்கே அறிவோ ஞானமோ இல்லை.+

  • எசேக்கியேல் 18:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 எல்லா உயிர்களும்* எனக்குத்தான் சொந்தம். தகப்பனுடைய உயிரும் சரி, மகனுடைய உயிரும் சரி, எனக்குத்தான் சொந்தம். பாவம் செய்கிற எவனும் செத்துப்போவான்.

  • ரோமர் 5:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது.+ இப்படி, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.+

  • 1 கொரிந்தியர் 15:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 ஆதாமினால் எல்லாரும் சாகிறதுபோல்,+ கிறிஸ்துவினால் எல்லாரும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்