26 இரண்டாவதாகப் பிறந்த குழந்தை தன்னுடைய அண்ணன் ஏசாவின் குதிங்காலைப் பிடித்தபடி வெளியே வந்தது.+ அதனால், இந்தக் குழந்தைக்கு யாக்கோபு*+ என்ற பெயர் வைக்கப்பட்டது. ரெபெக்காள் குழந்தைகளைப் பெற்றபோது ஈசாக்குக்கு 60 வயது.
28 அப்போது அந்த மனிதர், “இனிமேல் உன் பெயர் யாக்கோபு அல்ல, இஸ்ரவேல்.*+ ஏனென்றால், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி+ கடைசியில் ஜெயித்துவிட்டாய்” என்று சொன்னார்.