24 சில நாட்களுக்குப் பின்பு, அவருடைய மனைவி எலிசபெத் கர்ப்பமானாள்; ஐந்து மாதங்களுக்கு வெளியே போகாமல் வீட்டிலேயே இருந்தாள். 25 “யெகோவா என்னை இப்போது ஆசீர்வதித்திருக்கிறார்; என்னுடைய நிலைமையைப் பார்த்து, மக்கள் மத்தியில் எனக்கு ஏற்பட்ட அவமானத்தை நீக்கிவிட்டார்”+ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.