17 அப்போது மனோவா யெகோவாவின் தூதரிடம், “நீங்கள் சொன்னதெல்லாம் நிறைவேறும்போது நாங்கள் உங்களைக் கௌரவிக்க வேண்டும். அதனால் தயவுசெய்து உங்கள் பெயரைச் சொல்லுங்கள்”+ என்றார். 18 ஆனால் யெகோவாவின் தூதர், “என் பெயரை ஏன் கேட்கிறாய்? அது அற்புதமானது என்று உனக்குத் தெரியாதா?” என்றார்.