-
யாத்திராகமம் 26:7-11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் விரிப்பதற்கு வெள்ளாட்டு மயிரால்+ 11 கம்பளிகளைச் செய்ய வேண்டும்.+ 8 ஒவ்வொரு கம்பளியும் 30 முழ நீளத்திலும், 4 முழ அகலத்திலும் இருக்க வேண்டும். 11 கம்பளிகளும் ஒரே அளவில் இருக்க வேண்டும். 9 ஐந்து கம்பளிகளை ஒன்றாக இணைக்க வேண்டும். மற்ற ஆறு கம்பளிகளை ஒன்றாக இணைக்க வேண்டும். ஆறாம் கம்பளியைக் கூடாரத்தின் முன்புறத்தில் பாதியாக மடித்துப் போட வேண்டும். 10 இணைக்கப்பட்ட ஒரு கம்பளியின் ஓரத்தில் 50 காதுகளைத் தைக்க வேண்டும். இணைக்கப்பட்ட மற்றொரு கம்பளியின் ஓரத்திலும் 50 காதுகளைத் தைக்க வேண்டும். ஒரு கம்பளியின் காதுகள் மற்ற கம்பளியின் காதுகளோடு இணையும்படி இருக்க வேண்டும். 11 செம்பினால் 50 கொக்கிகளைச் செய்து, அந்தக் கொக்கிகளால் காதுகளை இணைக்க வேண்டும். அப்போது, முழு கூடாரத்துக்கும் ஒரே கம்பளி இருக்கும்.
-