-
யாத்திராகமம் 28:22-25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 மார்ப்பதக்கத்துக்காகச் சுத்தமான தங்கத்தில் முறுக்குச் சங்கிலிகள் செய்ய வேண்டும்.+ 23 அதோடு, இரண்டு தங்க வளையங்களைச் செய்து, அவற்றை மார்ப்பதக்கத்தின் இரண்டு மேல்முனைகளிலும் பொருத்த வேண்டும். 24 இரண்டு தங்க முறுக்குச் சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் மேல்முனைகளில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்ட வேண்டும். 25 அந்த இரண்டு முறுக்குச் சங்கிலிகளின் மற்ற இரண்டு முனைகளையும், ஏபோத்தின் முன்பக்கத் தோள்பட்டைகளில் இருக்கிற இரண்டு வில்லைகளில் பொருத்த வேண்டும்.
-